மாதவிலக்கு பிரச்னைக்கான மருத்துவம்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 58 Second

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் மருத்துவத்தை பார்க்கலாம். மாதவிலக்கிற்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு தொல்லைகள் ஏற்படுகிறது. வயிறு வீக்கம், வாயுத்தொல்லை, மார்பக வலி, மயக்கம், கைகால்களில் சோர்வு உண்டாகிறது. மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் பிரச்னைகளுக்கு குங்குமப்பூ, கல்யாண முருங்கை, ஓமம், லவங்கம் ஆகியவை மருந்தாகிறது.

சோம்பு, ஓமத்தை பயன்படுத்தி மாதவிலக்கின்போது ஏற்படும் வலிகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் சோம்பு, கால் ஸ்பூன் ஓமம், ஒருபிடி அளவுக்கு புதினா, சிறிது பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி மாதவிடாய் காலத்துக்கு 5 நாட்களுக்கு முன்பு ஒருவேளை குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்று வலி, இடுப்பு வலி, கைகால் குடைச்சல் வராமல் இருக்கும். சுரப்பிகளில் ஏற்படும் கோளாறால் மாதவிலக்கு பிரச்னை ஏற்படுகிறது. உடல்பயிற்சி மிகவும் முக்கியம். இதனால் ஹார்மோன்கள், மனோநிலையில் சமநிலை உண்டாகும்.

சோம்பு சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. வயிற்றில் காற்று சேர்வதை தடுக்கிறது. ஓமம் சிறுநீர் பெருக்கியாகவும், மாதவிலக்கை தூண்டக் கூடியதாகவும் விளங்குகிறது. புதினா வலி நிவாரணியாகிறது. காற்றை வெளித்தள்ளும் தன்மை உடையது. மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் மார்பக வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். கல்யாண முருங்கை இலை சாறு 20 மில்லி எடுக்கவும். இதனுடன் சம அளவு மோர் சேர்த்து மாதவிலக்கிற்கு முன்பு 10 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் மார்பக வலி இல்லாமல் போகும்.

மாதவிலக்கிற்கு முன்பு இடுப்பு வலி, அடிவயிற்று வலி, மனநிலையில் மாற்றம், சோர்வு, மார்பக வலி போன்றவை ஏற்படும். மார்பகங்களில் ஏற்படும் வலிக்கு கல்யாண முருங்கை மருந்தாகிறது. இதற்கு முள்முருங்கை என்ற பெயர் உண்டு. இதன் இலைகள் பூவரசு இலையை போன்று இருக்கும். இது மாதவிலக்கை தூண்டக்கூடியது. ஹார்மோன்கள் கோளாறை சரிசெய்யும். சத்தூட்டமான கல்யாண முருங்கை, வலி நிவாரணியாக விளங்குகிறது. மாதவிலக்கு கோளாறுகளுக்கு கழற்சிக்காய் அற்புதமான மருந்தாக விளங்குகிறது.

ஒரு கழற்சிகாயை உடைத்து அதனுள் இருக்கும் பருப்பை எடுத்து, 5 மிளகு சேர்த்து ஒருவேளை சாப்பிட்டுவர மாதவிலக்கு முறையாக இருக்கும். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல் பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். லவங்கத்தை நெய்விட்டு வறுத்து பொடி செய்து கால் ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து மாதவிலக்கிற்கு 10 நாட்களுக்கு முன்பு சாப்பிட்டுவர தலைவலி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகள் இருக்காது. லவங்கம் முதுகுவலி, அடிவயிற்று வலியை குணப்படுத்தும்.

மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் கைகால் வலி, தூக்கமின்மைக்கான மருந்து தயாரிக்கலாம். தண்ணீர் 50 மில்லி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து, மாதவிலக்கிறகு 10 நாட்களுக்கு முன்பு குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் கைகால் வலி, தூக்கமின்மை ஏற்படாது. மனச்சோர்வு நீங்கும். குங்குமப்பூ அதிகளவில் எடுத்துக்கொண்டால் வயிற்றுபோக்கு ஏற்படும் என்பதால் குறைவாக சேர்க்கவும்.

பதப்படுத்த உணவுகளை உண்பதால் அதில் இருக்கும் உப்புசத்து சேர்வது, நேரம் தவறி சாப்பிடுவதால் வயிற்றில் காற்று சேர்வது போன்றவை மாதவிலக்கு பிரச்னைக்கு காரணமாகிறது. இதை தவிர்க்க உடற்பயிற்சி அவசியம். இதனால் வியர்வை தூண்டப்பட்டு உப்பு வெளியேறும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை சேர்த்துகொள்வதால் மாதவிலக்கு பிரச்னைகள் சரியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-? (அவ்வப்போது கிளாமர்)
Next post பழங்களின் ராஜா | மங்குஸ்தான் பழத்தில் இவ்ளோ பயன்களா? (வீடியோ)