சளி, இருமலை விரட்டும் கற்பூரவள்ளி இலை..! (மருத்துவம்)

Read Time:3 Minute, 19 Second

கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். குறிப்பாக சளி மற்றும் இருமல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த இலை மிகவும் பலனளிக்கக் கூடியது. இந்த இலையை அப்படியே மென்றும் சாப்பிடலாம் அல்லது சாறாகவும் எடுத்துக் கொள்ளலாம். கற்பூரவள்ளி இலையை எவ்வாறு எடுத்துக் கொண்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்

* கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து அதை தேனுடன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

* மார்புச்சளி மற்றும் மூச்சுப்பிரச்னை இருக்கும் பட்சத்தில் அது ஆஸ்துமா அல்லது காசநோயாக மாறக்கூடும். குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும் மற்றும் மூச்சுப்பிரச்னையை போக்கவும் கற்பூரவள்ளி இலை மற்றும் துளசி இலையை சம அளவு எடுத்து சுத்தம் செய்து சாறு எடுத்து 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும், மூச்சு பிரச்னையும் நீங்கும்.

* கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கமறல் குணமடையும்.
* கற்பூரவள்ளிச் சாறு 200 மில்லியுடன், சம அளவு நல்லெண்ணை கலந்து காய்ச்சி இறக்கித் தலையில் தேய்த்து வந்தால் சைனஸ், தலைபாரம், மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.

* சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும். கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

* கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை இவற்றை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி காற்றுபுகாத டப்பாவில் போட்டு வைக்கவும். இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விக்னேஸ்வரனின் தனிமையும் பேரவையின் சிதைவும்!! (கட்டுரை)
Next post தூதுவளை!! (மருத்துவம்)