2019ம் ஆண்டில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி தேர்வு!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 6 Second

லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டி‌‌ஷ் ஹெரால்டு பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் 30.9 சதவீத வாக்குகளை பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டி‌‌ஷ் ஹெரால்டு பத்திரிகை 2019-ம் ஆண்டில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபர் யார்? என வாசகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. இதற்காக உலகின் 25 நாட்டை சேர்ந்த தலைவர்களின் பெயர்கள் இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.

இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ர‌ஷிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க ஜனாதிபதி டெனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இறுதிக்கட்ட போட்டிக்கு தேர்வானார்கள். இதற்கான வாக்கெடுப்பு 15ம் திகதி நள்ளிரவில் நிறைவடைந்தது.

நிறைவாக 30.9 சதவீத ஓட்டுகளை பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டார். 29.9 சதவீத வாக்குகளை பெற்று விளாடிமிர் புதின் 2-வது இடத்தையும், 21.9 சதவீத வாக்குகளை பெற்று டிரம்ப் 3-வது இடத்தையும், 18.1 சதவீத வாக்குகளை பெற்ற ஜின்பிங் 4-வது இடத்தையும் பிடித்தனர்.

இதையடுத்து பிரிட்டி‌‌ஷ் ஹெரால்டு பத்திரிகையின் ஜூலை 15ம் திகதி இதழ் அட்டைப்பக்கத்தில் மோடியின் படம் இடம்பெற உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆச்சர்யபடுத்தும் 12 விஷயங்கள்!!! (வீடியோ)
Next post வருடத்தில் 69 நாட்களுக்கு சூரியன் மறையாத அதிசய தீவு!! (உலக செய்தி)