கிர்கிஸ்தான் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ விமானம் மீது பயணிகள் விமானம் மோதியது

Read Time:1 Minute, 46 Second

air.accident.jpgகிர்கிஸ்தான் நாட்டில் அமெரிக்க ராணுவ விமானம் மீது பயணிகள் விமானம் மோதியது. இதில் ஒரு விமானம் தீப்பிடித்தது. 62-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ரஷிய விமான நிலையத்தில் இருந்து பிரிந்த கிர்கிஸ்தான் நாட்டில் பிஷ்செக் நகரின் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. அந்த விமானம் 200 அடி உயரத்துக்கு சென்றதும் அதே விமான நிலையத்தில் ஓடு பாதையில் அமெரிக்க ராணுவத்தின் சரக்கு விமானம் தரை இறங்க முயன்றது. அப்போது 2 விமானங்களும் மோதிக்கொண்டன.

பயணிகள் விமானத்தின் சிறகும், அமெரிக்க விமானத்தின் சிறகும், உரசிக்கொண்டன. இதில் பயணிகள் விமானம் சேதம் அடைந்தது. இதனால் தாறுமாறாக பறந்த விமானத்தை விமானி எப்படியோ பத்திரமாக தரை இறக்கினார். அதில் இருந்த விமானிகள் உயிர் தப்பினர்.

மோதிய வேகத்தில் ராணுவ விமானத்தின் சிறகில் தீப்பிடித்து கொண்டது. எரிந்தபடியே அந்த விமானமும் தரை இறங்கியது. தீயணைப்புப்படையினர் உடனடியாக தீயை அணைத்து விட்டதால் பெரிய அளவில் நடக்க இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.

air.accident.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திடீர் திருப்பம்: அதிமுக கூட்டணி உடைந்தது; திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள்
Next post “இஸ்லாம்” முதலில் நான் பாதிக்கப்பட்டேன்; இப்போது போப்பாண்டவர்: ருஷ்டி கருத்து