அழையா விருந்தாளியாக கர்ப்பக் கால சர்க்கரைநோய்! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 8 Second

கர்ப்பக் காலத்தில் அழையா விருந்தாளியாக வந்துசெல்லும் நோய், கர்ப்பக் கால சர்க்கரை நோய். நாம் சாப்பிடும் உணவு குளுகோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. கணையத்தில் சுரக்கும் இன்சுலின் இந்த குளுகோஸை நம்முடைய உடல் திசுக்கள் பயன்படுத்தும்படி செய்கிறது.

பெண்கள் 30 வயதுக்கு மேல் கர்ப்பம் அடைதல், அதிக எடை உள்ள பெண்கள், முந்தைய கர்ப்பகாலத்தில் ஏற்கெனவே சர்க்கரை நோய் இருந்தாலோ, மனநல நோய் அல்லது ஸ்டீராய்ட் மருந்து உட்கொண்டிருந்தாலோ அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் பிரச்னை இருந்தாலோ அவர்களுக்குச் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கர்ப்பக் காலத்தில் நஞ்சுக்கொடி, குழந்தையின் வளர்ச்சிக்காகப் பல்வேறு ஹார்மோன்களை சுரக்கிறது. கிட்டத்தட்ட இந்த அத்தனை ஹார்மோன்களும் இன்சுலின் செயல்பாட்டைப் பாதித்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதையே கர்ப்பக் கால சர்க்கரை நோய் என்கிறோம்.

பொதுவாக, கர்ப்பக் காலத்தின் 20-வது வாரத்தில் இது ஏற்படும். பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகு இது மறைந்துவிடும். பெரும்பாலான கர்ப்பக் கால சர்க்கரை நோயை ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம்.25 வயதைக் கடந்தவர்கள், பெற்றோருக்கு சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள் ஆரம்பத்திலேயே இதுபற்றி டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

கருத்தரித்த பெண்கள் அனைவரும் ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொள்வது மிகமிக அவசியம்.கருத்தரித்த 24-வது வாரத்தில் இருந்து 28-வது வாரத்துக்குள்ளாக ‘இனிஷியல் குளுகோஸ் சேலன்ஜ்’ டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும்.

இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் ‘குளுகோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்’ செய்துகொள்ள வேண்டும். கர்ப்பக் காலத்தில் சர்க்கரையைத் தவிர்க்க, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உணவில் நார்ச் சத்து அதிகமாகவும், கொழுப்பு மற்றும் கலோரி குறைவாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை! (மருத்துவம்)
Next post வட கொரியா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்!! (வீடியோ)