சிம்பிள் மேக்கப்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 30 Second

பெண்கள் அழகை வெளிப்படுத்த செய்யப்படும் ஒப்பனை எப்போதும் அவர்களின் தோல் நிறத்தோடு பொருந்திப்போக வேண்டும். பொருத்தமில்லாமல் செய்யப்படும் எந்தவகை ஒப்பனையும் பார்ப்பதற்குக் கூடுதலாக, பார்ப்பவர்களின் கண்களுக்கு மிகவும் உறுத்தலாகத் தெரியும். சில நேரங்களில் நகைப்புக்குறியதாகவும் மாறிவிடும். பொதுவெளிகளில் இயங்கும் பெண்கள் மற்றும் அலுவலகத்திற்குச் செல்லும் பெண்கள் தங்களின் தினப்படி ஒப்பனையை கண்களை உறுத்தாத வகையில் எப்படி செய்துகொள்வது, மேக்கப்பிற்கு பயன்படும் காஸ்மெட்டிக் தயாரிப்புகளை எப்படி தேர்வு செய்து வாங்குவது என்பது குறித்து விளக்குகிறார்
ஒப்பனைக் கலைஞர் ஃபாத்திமா.

சரியாகச் சொல்வதென்றால், நம் முகங்களில் போடும் மேக்கப் என்பது முகத்தில் பொருத்திக்கொள்ளும் ‘மாஸ்க்’ கிடையாது. நம்மிடம் இருக்கும் இயல்பான அழகை, அதாவது நம்முடைய புருவம், கண்கள், உதடு, மூக்கு போன்ற பார்த்ததும் பட்டென கண்ணில் படும் புலன்களை இன்னும் கொஞ்சம் கூடுதலாய் அழகாக்கி வெளிக்காட்டுவதுதான் மேக்கப். மேக்கப் என்பது ஒரு கலை. சரியான தயாரிப்புகள் மற்றும் நுணுக்கங்களை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் சிறந்த மேக்கப் போட்டுக் கொள்ள முடியும். தினசரி வேலை நிமித்தமாக வெளியில் செல்வோர், அலுவலகம் செல்வோர், மேக்கப்பை ரசித்துச் செய்வோர், திருமண விழா, பார்ட்டி போன்ற மாலை நேரத்து நிகழ்ச்சிகளுக்குச் செல்வோர் என பெண்கள் எப்படி தங்களை தேவையான அளவிற்கு ஒப்பனை செய்து கூடுதல் அழகியலோடு வெளிக்காட்டிக் கொள்வது என்பதைப் பார்ப்போம்.

நாம் போடுகிற மேக்கப் நமது முகத்திற்கு பொருந்திப்போக வேண்டும் என்றால், நம்முடைய சருமம் மிகவும் மிருதுவாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் இருக்க வேண்டும். அதற்காக நம் தோலிற்குத் தேவைப்படும் மிருதுவான தன்மையையும் பாதுகாப்பையும் தொடர்ந்து தோலுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் மேக்கப் சாதனங்களைப் பயன்படுத்தும்போது, நாம் போடும் மேக்கப் சுலபமாக நம் தோலோடு ஒன்றி மேட்ச் ஆகும்.

கிளன்சிங்

மேக்கப் போடுவதற்கு முன் செய்யப்படும் கிளன்சிங் என்பது தேவையான ஒன்று. இது மேக்கப் போடுவதற்கு என்றில்லை, நமது சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கண்டிப்பாக முகத்தை கிளன்சிங் செய்தல் வேண்டும். கிளன்சிங் லோஷன் மற்றும் மில்க் வடிவிலும் வருகிறது. கிளன்சிகை பஞ்சில் நனைத்து தினமும் இரவு முகத்திற்குத் தடவவேண்டும். இதன் மூலம் முகத்தில் உள்ள தோல் சுத்தமாகும். இதனால் முகப்பரு, பரு வந்த தழும்பு, முகத்தில் குழி, பள்ளம் வராமல் முகம் பாதுகாக்கப்படும். தோல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

மாய்ச்சரைஸர்

நமது தோல் எண்ணெய்ப்பசையுள்ள சருமமா அல்லது வறண்ட சருமமா என எந்த வகை சருமமாக இருந்தாலும் மேக்கப்பிற்கு முன்பாக நல்ல மாய்ச்சரைஸராக பயன்படுத்துதல் தோலிற்கு எப்போதும் நல்லது. வறண்ட சருமம் உள்ளவர்கள் மேக்கப்பிற்கு முன்பாக கட்டாயம் முகத்தை மாய்ச்சரைஸ் செய்தல் வேண்டும்.இனி நமக்கான மேக்கப் சாதனங்களை தேர்வு செய்வதையும் பயன்படுத்துவதையும் பார்ப்போம். மேக்கப் போடுவதற்கு ப்ரைமர், ஃபவுண்டேஷன், காம்பேக்ட் பவுடர், காஜல், ஐ லைனர், ஐ ஷேடோ, லிப் லைனர், லிப் ஃபாம், லிப்ஸ்டிக் போன்ற காஸ்மெட்டிக் பொருட்கள் தேவை. இனி எந்த வகை சருமத்துக்கு எந்தமாதிரியான புராடெக்டுகளை தேர்வு செய்து, எப்படி பயன்படுத்தி மேக்கப் போட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேக்கப் போடுவதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்தல் வேண்டும். முதலில் ப்ரைமரை முகத்தில் தடவவேண்டும். ப்ரைமர் போட்டு மேக்கப் செய்வதால் நாம் போடும் மேக்கப் தோலின் உள்ளே நுழையாமல் தோல் பாதுகாக்கப்படுவதுடன், நீண்ட நேரம் மேக்கப் முகத்தில் இருக்கவும் உதவும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் என்றால் மேட் பினிசிங் ப்ரைமராக பார்த்து வாங்க வேண்டும். வறண்ட சருமம் என்றால் ஜெல் ப்ரைமர் அல்லது வாட்டர் ஃபேஸ்டு ப்ரைமரை பயன்படுத்த வேண்டும். சாதாரண சருமம் உள்ளவர்கள், நார்மல் ஸ்கின் ப்ரைமரையே பயன்படுத்தலாம். ப்ரைமரை பயன்படுத்தும்போது எப்போதும் முகத்தில் எல்லா இடங்களிலும் சமமாக தடவவேண்டும்.ப்ரைமரை அப்ளை செய்ததும், அடுத்ததாக ஃபவுண்டேஷனை முகத்தில் போட வேண்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஸ்டிக் ஃபவுண்டேஷனையும், வறண்ட சருமம் உள்ளவர்கள் லிக்யூட் ஃபவுண்டேஷனையும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

ஃபவுண்டேஷன் தேர்வு எப்போதும் நம் ஸ்கின் டோனோடு ஒத்துப்போக வேண்டும். அதாவது நம் தோலின் நிறத்திலேயே ஃபவுண்டேஷன் இருத்தல் வேண்டும். ஃபவுண்டேசனை நெற்றி, கன்னம் அல்லது தாடை இவற்றில் லேசாகத் தடவிப் பார்த்து வாங்க வேண்டும். கை அல்லது கை மணிக்கட்டில் போட்டுப் பார்த்து வாங்குதல் தவறான அணுகுமுறை. அதேபோல் டார்க் மற்றும் டஸ்கி ஸ்கின் உள்ளவர்கள் அதிகம் ஃபேராகத் தெரிய வேண்டும் என நினைத்து பேர் ஃபவுண்டேஷனை வாங்கினால் கூடுதல் டார்க்காக அல்லது ஓவர் ப்ரைட்டாகத் தோற்றம் கிடைக்கும். ஃபவுண்டேஷனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சமமாக அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்ததும் கொஞ்ச நேரம் நமது தோலில் செட்டாவதற்கு இடைவெளி கொடுக்க வேண்டும்.

ஃபவுண்டேஷனைத் தொடர்ந்து காம்பேக்ட் பவுடரை மேல் பூச்சாகப் போடுதல் வேண்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஃபவுண்டேஷனுக்கு பின் கட்டாயம் காம்பேக்ட் பவுடர் பயன்படுத்த வேண்டும். காம்பேக்ட் பவுடர் வாங்கும்போது ஸ்கின் நிறத்திற்கு ஏற்ற அதே ஷேட் அல்லது ஒரு ஷேட் லைட்டராகப் பார்த்து வாங்கி பயன்படுத்தலாம். ட்ரை ஸ்கின் என்றால் சாதாரண டிரான்ஸ்பரன்ட் பவுடரை பயன்படுத்தினாலே போதும். அன்றாடம் பயன்படுத்தும் டிரான்ஸ்பரன்ட் பவுடரை ஃபவுண்டேஷனுக்கு பின் அப்ளை செய்யும்போது மேக்கப்போடு செட்டாகிவிடும்.

ஐப்ரோ பவுடர், ஐப்ரோ ஜெல், ஐப்ரோ ப்ரிமேட் போன்றவை ஐப்ரோவை கூடுதல் வடிவில் அழகாக எடுத்துக்காட்ட விற்பனையில் உள்ளன. பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரியான புராடெக்டை வாங்கி பயன்படுத்தி, ஐப்ரோக்களை திருத்தி வரையும்போது எடுத்த உடனே அடர்த்தியாக வரைதல் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக தேவைக்கேற்ப அடர்த்தியாக்க வேண்டும்.காஜல் மற்றும் ஐ லைனரைப் பயன்படுத்த நினைப்பவர்களும், இவற்றைப் பயன்படுத்திய பின் வெளியில் செல்ல நினைப்பவர்களும் அவர்களது கண் வடிவிற்கு ஏற்ப, அதாவது கண்கள் சிறிதாக இருக்கிறது என்றால் வாட்டர் லைனுக்கு கீழே போட வேண்டும்.

அப்போது ஐ லைனர் அவர்களின் கண்களைப் பெரிதாக எடுத்துக் காட்டும். கண் பெரிதாக இருப்பவர்கள் வாட்டர் லைன் மேலே லைனரைப் போட்டு, கண்களின் இறுதியில் உள்ள ‘வி’ வடிவ ஷேப்பில் டார்க்காக கொடுத்து ஓப்பனிங்கில் லைட்டாக கோடு வடிவில் மெலிதாகப் போட்டால் கண் பார்க்க மிகவும் அழகாகப் ப்ரைட்டாகத் தெரியும். ஐ ஷேடுகளை பகல் நேரங்களில் பயன்படுத்தத் தேவையில்லை. பயன்படுத்த விரும்புபவர்கள் நியூட் ப்ரௌன் கலர் ஐ ஷேடுகளாக வாங்கிப் பயன் படுத்தலாம்.லிப் லைனர் மற்றும் லிப்ஸ்டிக் இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு நமது உதடுகளை ஸாப்ட் அண்ட் ஸ்மூத்தாக வெடிப்பு எதுவும் இன்றி வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு லிப் ஃபார்ம் பயன்படுத்தலாம். லிப் ஃபார்ம் போட்டதும், அதை டிஸ்யூ பேப்பரால் ஒத்தி எடுத்துவிட்டு, லைனர் போட்டு பிறகு லிப்ஸ்டிக் போட வேண்டும். இல்லை என்றால் லிப் ஸ்க்ரப் செய்துவிட்டு லிப்ஸ்டிக் போடலாம்.

லிப் ஸ்க்ரப்பை நம் வீட்டிலே செய்யலாம். சர்க்கரை, லெமன், தேன் மூன்றையும் கலந்து உதடுகளில் தடவி ஸ்க்ரப் செய்தால் உதட்டில் உள்ள டெட் ஸ்கின் நீங்கிவிடும். அத்துடன் உதடுகள் மிகவும் மென்மையாக மாறும். முதலில் லிப் லைனரால் ஒரு அவுட் லைன் கொடுத்து அதன் பிறகே லிப்ஸ்டிக் போடவேண்டும். மேட் லிப்ஸ்டிக் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கும். இந்தவகை லிப்ஸ்டிக்கை ஈவினிங் பார்ட்டி மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு வெளியில் செல்லும்போது டார்க் ஷேடாகப் போடலாம். அலுவலகம் செல்வோர், லிப்ஸ்டிக் இன்றி வெளியில் போக விரும்பாதவர்கள் நியூட்ரலாக ஒரு லைட் ஷேடாகப் பயன்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு ? (வீடியோ)
Next post ஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்!! (சினிமா செய்தி)