சர்வாங்க ஊர்த்வ பத்மாசனம்!! (மகளிர் பக்கம்)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ எனும் பழமொழிக்கு ஏற்ப நாம் நம் வாழ்வில் நோயில்லாமல் வாழ யோகாசனம் உதவுகிறது. உடலின் பகுதிகளை நீட்டுதல், மடக்குதல், திருப்புதல், அசைத்தல் எனும் நிலைகளைக் கொண்டு மூச்சுக் காற்றை ஒழுங்குபடுத்த முறையான ஆசனங்களை செய்து பழகலாம். நல்வாழ்வினை பெற உடல்நலம் மட்டுமின்றி மனநலமும் அவசியம். அதற்கு ஆசனங்கள் பேருதவி புரிகிறது. ‘சர்வாங்க ஆசனம்’ மற்றும் ‘பத்மாசனம்’ இரண்டும் ஆசனங்களின் நிலைகளில் கலந்து வருவதால் அதற்கு சர்வாங்க ஊர்த்வ பத்மாசனம் எனப் பெயர் பெற்றது.
செய்முறை:
முதலில் மல்லாந்து படுத்து மூச்சை நன்கு இழுத்து வெளியிடவேண்டும். பின் இடுப்பு பகுதியையும் சேர்த்து இரு கால்களையும் மேலே தூக்க வேண்டும். இரு கால்களையும் மேலே தூக்கும் போது மூச்சை மெதுவாக உள்ளே இழுக்க வேண்டும். பின்பு இரு கைகளையும் இடுப்புப் பகுதியை அணைத்து பிடித்தவாறு மூச்சுக் காற்றை மெல்ல உள்ளே இழுக்க வேண்டும். இரு கைகளையும் அழுத்தமாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
பின் வலது காலை இடது தொடை மீதும், இடது காலை வலது தொடை மீதும் பத்மாசனம் போன்று போட வேண்டும். பார்வையை மூக்கு நுனி மீது வைத்து மூச்சுக்காற்றை மெதுவாக உள்ளே இழுத்து விடவும். பின் கால்களை ஓய்வு இயல்பு நிலைக்கு கொண்டு வந்து மல்லாந்து படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். இதே முறையில் நம்மால் முடியும்வரை செய்யலாம்.
சர்வாங்க ஊர்த்வ பத்மாசனத்தின் பயன்கள்:
தலைப்பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது. தோள் மற்றும் கழுத்துப் பகுதிக்கு வன்மை தந்து உதவுகிறது. மார்பு பகுதி விரிவடைந்து இதயத்தில் காற்றோட்டத்தை சீராக்குகிறது. நுரையீரலுக்கு காற்றோட்டத்தை அதிகப்படுத்துகிறது. கண்களுக்கு பார்வையை அதிகப்படுத்துகிறது.
முள்ளந்தண்டு எலும்புகளுக்கு உறுதியை அளிக்கிறது. இடுப்பு மற்றும் எலும்பு தேய்வினால் வரும் வலியை குறைத்து அதை சரி செய்கிறது. தொடைப் பகுதி தசைகளை வன்மை அடையச் செய்கிறது. மலச்சிக்கலை தடுக்கிறது. செரிமான மண்டலத்தை சீர் செய்கிறது. கல்லீரல் வீக்கத்தை சீர் செய்து கொள்ள உதவுகிறது. சிறுநீர்ப் பாதை தாபிதத்திதை சீர் செய்ய உதவுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating