இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற பெண் பலி !! (உலக செய்தி)
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி பெண் உஷிலா பட்டேல் (வயது 31). இவரும் லண்டனை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளரான சந்தாரியாவும் (33) ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த மாதம் 19 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் அவர்கள் தேன்நிலவுக்காக லண்டனில் இருந்து இலங்கைக்கு சென்றனர். அங்கு காலே நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருவரும் அறை எடுத்து தங்கினர். இங்கு தங்கியிருந்து பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, பின்னர் மாலைத்தீவு செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் 25 ஆம் திகதி 2 பேருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த வாந்தி மற்றும் கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி உஷிலா பட்டேல் பரிதாபமாக இறந்தார். உடலில் நீர்வறட்சி மற்றும் தொடர் வாந்தி காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தனது மனைவி இறப்புக்கு ஓட்டல் உணவு தான் காரணம் என்றும் அவர்கள் அளித்த உணவில் ஏதோ துர்நாற்றம் வீசியதாகவும் சந்தாரியா கூறினார். ஆனால், ஓட்டல் நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.
இந்நிலையில் விசாரணை முடியும் வரை சந்தாரியாவை நாட்டுக்கு அனுப்ப இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சந்தாரியா கைது செய்யப்படவோ அல்லது அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவோ இல்லை என்றும், எனினும் விசாரணை முடியும் வரை அவர் இலங்கையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating