நோய்களை விரட்டும் ஓமம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 25 Second

1.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்று பொருமல், வயிற்று வலி, அஜீரண கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
2.ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
3.தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும்.

4.மந்தத்தை போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
5.பசியை தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
6.குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும். வயிற்று கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது.

7.அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.
8.வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்து பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.
9.நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதை தடவினால் நாளடைவில் மூட்டு வலி குணமாகும்.
10.மார்பு சளி இருந்தால், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவ சரியாகும். பல் வலி இருந்தால், இந்த எண்ணெயை பஞ்சில் தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.

11.வயிறு “கடமுடா” வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.
12.ஓம பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும். சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு நீங்கும்.
13.தொப்பையை குறைக்க தினமும் இரவில் அன்னாச்சி பழம் 4 துண்டு, ஓமம் பொடி 2 ஸ்பூன் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும். காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்றாக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு 15 நாள் செய்து வந்தால் தொப்பை காணாமல் போய்விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனதை அமைதியாக்கும் யோகாசனம்!! (மகளிர் பக்கம்)
Next post சூரிய நமஸ்காரம்!! (மகளிர் பக்கம்)