பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க வேண்டுமா? (மருத்துவம்)

Read Time:3 Minute, 36 Second

பெண்களின் வாழ்க்கையில் கருத்தரித்தல் மற்றும் பிரவசம் என்பது மிகவும் முக்கியமான தருணங்கள். இத்தருணங்களில் உடல் எடையானது, அளவுக்கு அதிகமாக இருக்கும். அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது உடல் எடையை அதிகரிக்க வேண்டும் தான். ஆனால் பிரசவத்திற்கு பின்னும் உடல் எடையானது குறையாமல் அப்படியே இருந்தால் அது அழகை கெடுப்பதுடன் எரிச்சலூட்டும். பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பின்னர் சற்று எடை அதிகரிப்பார்கள். இது ஒரு இயற்கையான நிகழ்வு. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது அதிகரிக்கும் உடல் எடையானது, பிரசவத்திற்கு பின் குறைவதற்கு சற்று நாட்கள் ஆகும்.

ஆகவே அப்போது உடல் எடை அதிகமாக உள்ளது என்று வருத்தப்படாமல், பொறுமையாக இருந்து உடல் எடையை குறைப்பதற்கான சில இயற்கை வழிகளில் ஈடுபட்டால் நிச்சயம் உடல் எடையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது கடுமையான டயட்டை மேற்கொள்ள கூடாது. ஏனெனில் அப்போது தாய்ப்பால் கொடுப்பதால் உடல் எடையை அதிகரிக்காத மற்றும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் வகையில் பழங்கள், காய்கறிகளை அதிகம் உண்ணும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் உடல் எடையானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

தாய்ப்பால் கொடுத்தால், பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். ஏனெனில் பாலானது உற்பத்தியாகும் போது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடையானது குறையும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்றும் எந்நேரமும் உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.ஆனால் அவ்வாறு உடற்பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பிக்கும் முன் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்க வேண்டும். ஏனெனில் பிரசவத்தினால் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாவதற்கு சில நாட்கள் ஆகும். எனவே காயங்கள் குணமாவதற்கு முன்பே உடற்பயிற்சியில் ஈடுபட்டால் அது வேறு சில விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

ஆகவே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்ற பின்னரே உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். பிரசவத்திற்கு பின்னர் உடலானது மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு சற்று தாமதமாகும். ஆகவே அப்போது பொறுமையுடன் இருந்து சரியான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. மேலும் அத்துடன் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், யோகாவில் ஈடுபடுவதும் மிகவும் சிறந்தது. இதனால் மனம் ரிலாக்ஸ் அடைவதுடன் உடல் எடையும் ஆரோக்கியமாக குறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை சம்பவ நபர்கள் இந்தியாவில் எங்கெல்லாம் சென்றார்கள்? -ராணுவத் தளபதி!! (வீடியோ)
Next post பள்ளிக்கு பறந்து செல்லும் மாணவி!! (மகளிர் பக்கம்)