பிறந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா? (மருத்துவம்)

Read Time:2 Minute, 50 Second

குழந்தைக்கு பால் புகட்டிக் கொண்டிருக்கும் போதே போதிய பால் அருந்தாமலேயே கூட சில குழந்தைகள் உறங்கத் தொடங்கி விடும். அப்படிப்பட்ட வேளைகளில் குழந்தை உறங்காமல் இருக்கவும், போதிய அளவிற்கு பால் அருந்த வேண்டும் என்பதற்காகவும், குழந்தை பால் சுவைத்திடுகையில், அவ்வப்போது குழந்தையின் குதிகாலை வருடிக் கொடுத்து உறங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். குழந்தை வளர்ச்சியின் ஆரம்பக்கட்டத்தில் அடிக்கடி பால் தேவைப்படும்.

சில வேளைகளில் மூன்று மணிக்கொரு முறை கூட பால் புகட்ட வேண்டியிருக்கும். சற்றே வளரத் தொடங்கி விடும் குழந்தைக்கு பால் கொடுக்கும் இடைவெளி நீடித்துப் போகும். அந்தப் பால் கொடுக்கும் இடை வெளியானது 4 மணியில் இருந்து 6 மணி வரை கூட அமையலாம். ஆனால் வளர்ச்சிகேற்ப பாலின் அளவைக் கூட்டிக் கொடுத்து வரவேண்டும். குழந்தைக்குத் தேவையான தண்ணீரும் பாலில் இயற்கையாகவே இருப்பதால் கூடுதலாகத் தண்ணீர் தேவை இல்லை என்கின்ற நிலை இருந்தாலும் தண்ணீர் தருவதும் அவசியம் தான்.

ஏனென்றால் பல்வேறு பட்ட சுவைகளையும் குழந்தை அறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லை யென்றால் பாலை தவிர பிற உணவு வகைகளை நாடாமல் தட்டி விடும் வாய்ப்புகள் பெருகி விடும். குழந்தை அழும் போதெல்லாம் பால் மட்டுமே புகட்ட வேண்டும் என்பதில்லை.

பால் புகட்டும் வேளைகள் தவிர இடைப்பட்ட நேரங்களில் கொதிக்க வைத்து ஆறிய சற்றே வெதுவெதுப்பான தூய்மையான வெந்நீரினை பாலாடை கொண்டு கொடுத்து வரலாம். வெப்பம் நிறைந்த சூழலில் வாழ்கின்ற குழந்தைகளின் உடல் நலத்திற்கு தண்ணீரும் மிகவும் இன்றியமையாததாகும். பால் மட்டுமின்றி தண்ணீரையும் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்னைகள் பெரும்பாலும் ஏற்படுவதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினி ஸ்டைல் கிரிக்கெட் !! (சினிமா செய்தி)
Next post வீராசனம்!! (மகளிர் பக்கம்)