அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை.. !! (மருத்துவம்)

Read Time:3 Minute, 32 Second

சின்னம்மை மிகவும் அதிகமாகத் தொற்றும் பண்புடைய நோயாகும். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடித் தொடர்பு மூலமாக பரவலாம் அல்லது தொற்றுடையவர் இருமுவதாலோ தும்முவதாலோ காற்றின் மூலம் பரவலாம். சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும் நோய் பரவலாம். சூரிய கதிரின் நேரடி தாக்குதலால் மயக்கம், தலை சுற்றல், தோல் வியாதி, வேர்க்குரு, கட்டி போன்றவைகள் ஏற்படக்கூடும்.

* அதனால் பகல் 11 முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அப்படியே வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் வெள்ளை நிறக்குடையை பிடித்துக் கொண்டோ அல்லது தொப்பி அணிந்தோ செல்ல வேண்டும்.

* அம்மை நோய் தாக்கியவர்கள் கடுமையான உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். அதோடு மருந்துகள் எடுத்துக் கொண்டால் எளிதில் குணம் பெறலாம். நோய் துவங்கிய உடன் நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர், கஞ்சி சாப்பிடலாம். பழச்சாறு கள், பால் குடிப்பதும் நல்லது.

* அம்மை நோய் தாக்கத்தின் போது ஏற்படும் காய்ச்சல் குறைந்த பின்னர் மசித்த உணவுகளாக சாப்பிட வேண்டும். சமையலில் எண்ணெய் சேர்க்கக் கூடாது. குறைந்தளவு உப்புதான் எடுக்க வேண்டும். மாதுளை, கருப்பு திராட்சை, சாத்துக்குடி, ஆப்பிள், ஆரஞ்சு பழச்சாறுகள் அருந்தலாம்.

* தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் தண்ணீர் கொடுக்க வேண்டும். இளநீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

* வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க பருத்தி உடைகளை உடுத்த வேண்டும். குழந்தைகளை வெயிலில் அழைத்து செல்ல கூடாது.

* பெண்கள் வெயிலில் போய்விட்டு வந்தவுடன், பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க கூடாது. கண்ணுக்கு தெரியாத நுண்ணிய கிருமிகள் இருக்கும். அதனால், குளித்துவிட்டு சிறிது நேரம் கழித்து தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

* சர்க்கரை நோய், நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் உச்சி வெயில் நேரத்தில் வெளியே செல்லக்கூடாது.

* சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால் காலரா, மலேரியா, டைபாய்டு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் எளிதாக வரக்கூடும். அதனால், தண்ணீரை நன்றாக காய்ச்சி, ஆறவைத்து குடிக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடகொரியாவை டிரம்ப் அரசு எப்படி சமாளிக்கும்? (வீடியோ)
Next post காதலுக்கு கண்ணுண்டு!! (மகளிர் பக்கம்)