அந்த நடிகர் தான் பிடிக்கும் – மிஸ் இந்தியா! (சினிமா செய்தி)
சென்னையை சேர்ந்த அபூர்வி சைனி மார்ச் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற “ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா” என்கின்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு “ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019” என்ற பட்டத்தை வென்றார். இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், அபூர்வி சைனி பட்டத்தை வென்றார்.
அபூர்வி தற்போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். 21 வயது ஆகும் இவர், தனது 19ஆவது வயதில் மாடலிங் துறையில் கால் பதித்து “ரிலையன்ஸ் ஜுவேல்ஸ் மிஸ் இந்தியா சென்னை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா, பிரெஷ் பேஸ் சோசியல் ஸ்டார் போன்றவற்றில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார். இவர் விளம்பர படங்களிலும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்து உள்ளார்.
நடிப்பு, பாடல், நடனம் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இவர் இந்தியா சார்பில், பிலிப்பைன்ஸில் நடத்தப்படும் “பேஸ் ஆப் பியூட்டி” என்ற அழகு போட்டியில் இந்த வருட இறுதியில் கலந்துகொள்கிறார்.
தன்னுடைய நாடு சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும். என்னுடைய பட்டத்தின் மூலம் இந்த நாடு, மக்கள் மற்றும் என் பெற்றோர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பேன் என்றும், தற்போது பெரிய கனவுகளை கண்டு மக்களின் இதயத்தை வெல்ல வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
அவருடைய பெரிய கனவு வெள்ளித்திரையில் கால் பதித்து தனக்கு பிடித்த நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதே ஆகும். மேலும் எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி எனவும் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating