மக்களின் விடுதலைக்காய் மண்ணின் வித்தான கேணல் ரெஜியின் இரண்டாம் ஆண்டு நினைவு

Read Time:3 Minute, 39 Second

TMVP.Reji2nd...005peg.jpeg.jpgமக்களினதும் மண்ணினதும் விடுதலை எனும் உயர்மிகு இலட்சியத்திற்காய் அடக்குமுறைக்கெதிராய் கிளர்ந்தெழுந்து இறுதி மூச்சுவரை தன் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் போராடி இம் மண்ணின் வித்தான மாவீரர்களான கேணல் ரெஜி, லெப்.கேணல் துமிலன், 2ம் லெப்டினன் எழில் ஆகியோரது இரண்டாம் ஆண்டு நினைவு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

நேருக்கு நேர் நின்று சமர் புரிந்து இம் மாவீர மறவர்களை வீழ்த்த முடியாது என்றுணர்ந்த துரோகிகளினால் கடந்த 2004.09.23 அன்று மாதுறு ஓயா காட்டுப் பகுதியில் வைத்து துயில் கொள்ளும் வேளையில் வீழ்த்தப்பட்ட இம் மாவீரர்களின் இழப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இலட்சியம் மிகு போராட்டப் பாதையில் பின்னடைவை ஏற்படுத்தினாலும் இன்று இப் போராட்டம் விரிந்து விருட்சமாய் இருப்பதற்கு ஊக்கத்தையும் உணர்வையும் தந்தது இம் மாவீரர்களின் இழப்பென்றால் அது மிகையல்ல.

இம் மாவீரர்களின் நினைவை முன்னிட்டு 23.09.2006 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவின் மூன்றாவது விஷேட பயிற்சிப் படையணியின் பயிற்சி நிறைவு நிகழ்வும் இடம்பெற்றது. இப் விசேட பயிற்சிப் படையணியின் போராளிகள் விசேட பயிற்சி பெற்று களப் போராளிகளுடன் இணைந்து கொண்டனர். அத்துடன் இப்போராளிகளின் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள், பொறுப்பாளர்கள், பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொடியை தளபதி ஜெயம் ஏற்றிவைக்க, மாவீரர்களின் உருவப் படங்களுக்கு பொறுப்பாளர் மங்களம் மாஸ்டரினால் மங்கள விளக்கேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் பொறுப்பாளர்கள் றியசீலன், அஜித்தினால் மாவீரர்களின் உருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தளபதி மார்க்கனினால் பயிற்சியை நிறைவு செய்த போராளிகளுக்கு யுத்த தந்திரோபாயங்கள் குறித்த விசேட சொற்பொழிவாற்றப்பட்டது.

பயிற்சியை நிறைவு செய்த போராளிகளுக்கு பொறுப்பாளர்கள் சிந்துஜன், சின்னத்தம்பி, இசையாளன் ஆகியோரினால் நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இந்நிகழ்வில் TMVPபொறுப்பாளர்கள் பிரதீப், து}யவன், மகேந்திரன்(பிஎல்ஓமாமா), தவம், குணாளன், கஜன், ஈழமாறன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

TMVP.Reji2nd...002peg.jpeg.jpg
TMVP.Reji2nd...003peg.jpeg.jpg
TMVP.Reji2nd...004peg.jpeg.jpg
TMVP.Reji2nd...005peg.jpeg.jpg
TMVP.Reji2nd...006peg.jpeg.jpg
TMVP.Reji2nd...007peg.jpeg.jpg
TMVP.Reji2nd...008peg.jpeg.jpg
TMVP.Reji2nd...10peg.jpeg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘நாட்டிய போரொளி’ நடிகை பத்மினி மரணம்
Next post பார்வர்ட் பிளாக்கில் இருந்து கார்த்திக் நீக்கம்!!