ஏன் வேண்டும் உச்சகட்டம் ? (அவ்வப்போது கிளாமர்)

Read Time:3 Minute, 54 Second

தன்னுடைய உடலில் எவ்வளவோ இன்பம் பொதிந்து கிடக்கிறது என்ற உண்மை தெரியாமல் அல்லது தெரிந்தும் அதை அனுபவிக்க முடியாமல் இவ்வளவு காலமும் பெண்கள் கட்டுப்படியாக இருந்துவிட்டார்கள். ஆனால் இன்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டி, இணையதளம், தொலைபேசி மூலமாகத் தெரியாத பல விஷயங்களையும் புரியவைத்திருக்கிறது விஞ்ஞானம். அதனால், இவ்வளவு காலம் இருந்ததுபோல் இனியும் பெண்கள் ஏமாளியாக இருக்கபோவதில்லை என்பதுதான் உண்மை. தன்னுடைய இன்பத்தை மட்டும் பெண்களில் உடலில் தித்துக்கொண்ட ஆண்கள், இனியும் அப்படியே சுயநல வாதிகளாக இருக்க முடியாது. பெண்களும் இன்பம் வேண்டும் என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அதற்காகப் போராடவும் தொடங்கிவிட்டார்கள். பெண்களுக்கு இன்பம் கிடக்காதபட்சத்தில், ஆண்களுக்கும் இன்பம் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் இன்றைய நிலை. அதனால் செக்ஸ் இன்பம் இனி பரஸ்பரம் இருவரும் அனுபவிப்பதாகவே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு கலவியின்போதும் ஆண்கள் எளிதில் உச்சகட்டம் அடைந்துவிடுகிறார்கள். அதுபோல் உச்சகட்டத்தை எதிர்பார்க்கிறார்கள். அதற்க்கு உதவி செய்ய வேண்டியது ஆண்களின் கடமையாகும். இந்த செயல் பாடுகளில் இருந்து ஆண்கள் தவறினால் அல்லது தவிர்த்தால், குடும்பம் உறவு சிதையும் சூழல் உருவாகிவருகிறது. அதனால்தான், இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் குடும்ப வசக்குகள் பெரும்பாலும் ஆண்களால் திருப்திப்படுத்த இயலவில்லை என்ற குற்றச் சாட்டுகளுடனே வருகின்றன

இன்றைய தினம், பல்வேறு காரணங்களைக் காட்டி விவாகரத்து பெற இயலும் :

1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறு ஓயருவருடன் விரும்பி உடலுறவுகொள்ளுதல்.

2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செயல்.

3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கைவிட்டுச் செல்லுதல்.

4. தம்பதிகளில் ஒருவரு தீர்க்கமுடியாத அளவில் ம நோய்க்கு ஆளாதல்.

5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருத்தல்.

6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து எழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா, இல்லையா என்று தெரியாதிருத்தல்.

7. திருமணமான கணவன், ஓரினப் புணர்ச்சி மற்றும் விலங்குகளுடன் புணர்ச்சி வைத்திருத்தல்.

8. ஆண்மையற்று இருத்தல் அல்லது பெண்ணைத் திருப்திப்படுத்த முடியாத நிலையில் இருத்தல்.

9. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனைச் சட்டத்தில் செயள்ளப்பட்டுள்ள குற்றம் ஒன்றுக்காக ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை பெறுதல் போன்ற சூழ்நிலைகளில் மணமுறிவு (விவாகரத்து) கேட்டு மனு செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணால் ஆயுள் தண்டனை வாங்கிய சரவண பவன் அதிபர்!! (வீடியோ)
Next post வில்வம்!! (மருத்துவம்)