ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் கொடுத்த வாய்ப்பு!! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 42 Second

கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவ்ரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் அறிமுகமாக உள்ளார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்க கார்த்தி நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ராஷ்மிகா. இந்த வாய்ப்பு ரசிகர்களால்தான் இவருக்கு கிடைத்ததாக தகவல்கள் வருகிறது.

கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்த ராஷ்மிகாவிடம் தமிழில் எப்போது நடிக்கப்போகிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர். அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா, ‘இந்த கேள்வியை நீங்கள் ஹீரோக்களிடம்தான் கேட்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் நான் நடிப்பேன்’ என தெரிவித்திருந்தார்.

ராஷ்மிகாவின் இந்த பதிலை சவாலாக ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் இணைய தளங்களில் ஹீரோக்களிடம் ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று கோரி வந்தனர்.

இடையில் விஜய் நடிக்க அட்லீ இயக்கும் படத்தில் ராஷ்மிகா நடிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து அதை பிரபலமாக்கினார்கள். அதன் பலனாக ராஷ்மிகா தற்போது தமிழில் அறிமுகம் ஆகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல லட்சம் தடவை பார்க்கப்பட்ட இந்த குழந்தையின் செயலை பாருங்க!! (வீடியோ)
Next post பயங்கரவாதிகள் தாக்குதலை இனியும் பொறுக்க முடியாது!! (உலக செய்தி)