சன்பீஸ்ட் ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி `சாம்பியன்’- ஒற்றையர் பிரிவில் ஹிங்கிஸ் முதலிடம்

Read Time:3 Minute, 22 Second

Tennis(Hingis-Saniya).jpg32 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற சன்பீஸ்ட் ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் முதல்நிலை வீராங்கனையும், தற்போது உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் இருப்பவருமான மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து), ரஷிய வீராங்கனை ஒல்காவை எதிர்த்து ஆடினார். பழுத்த அனுபவசாலியான ஹிங்கிஸ் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினார். ஹிங்கிசின் நேர்த்தியான ஆட்டத்துக்கு முன்னால் ஒல்காவால் ஈடுகொடுத்து ஆடமுடியவில்லை. இதனால் முதல் செட்டை ஹிங்கிஸ் 6-0 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றினார்.

முதல் செட்டை புள்ளிகள் எதுவும் பெறாமல் கோட்டை விட்டதால், ஒல்கா 2-வது செட்டில் சுதாரித்துக் கொண்டு ஆடினார். இதனால் இருவரும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றனர். எனினும் கடைசியில் 2-வது செட்டையும் ஹிங்கிசே கைப்பற்றினார். இதில் மார்ட்டினா ஹிங்கிஸ் 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று `சாம்பியன்’ பட்டத்தை தட்டிச் சென்றார்.

இரட்டையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா-லிஷெல் குபர் (தென் ஆப்பிரிக்கா) ஜோடி, உக்ரைனை சேர்ந்த யுலியா பெய்ஜெல்ஜிமர்-யுலியனா பெடக் ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தின் தொடக்க செட்டில் இரு ஜோடி வீராங்கனைகளும் சமபலத்துடன் மோதினர். எனினும் முதல் செட்டை சானியா ஜோடி 6-4 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதல் செட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் பதட்டம் இன்றி ஆடிய சானியா ஜோடி 2-வது செட்டை 6-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. குறிப்பாக சானியாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்த ஆட்டத்தில் சானியா ஜோடி 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

பீஜிங்கில் நடந்த சீன ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியின், இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை மவுரெஸ்மோ, ரஷிய வீராங்கனை சுவெட்லானா குஸ்னெட்சோவாவை எதிர்த்து ஆடினார். இந்த ஆட்டத்தில் மவுரெஸ்மோ 4-6, 0-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற சுவெட்லானா சாம்பியன் பட்டத்தை பெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்தியாவின் பங்களிப்பு குறித்து கலந்துரையாடல்
Next post பின் லேடன் “இறப்பை’ உலகம் நம்பவில்லை!