ஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்!! (கட்டுரை)
ஜீப் காம்பஸ் எஸ்யூவி ரக காருக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், டாடா ஹாரியர் வருகை, ஜீப் காம்பஸ் மார்க்கெட்டில் நெருக்கடியை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நெருக்கடியை போக்கிக்கொள்ளும் விதமாக ஜீப் காம்பஸ் காரின் புதிய வேரியண்ட்டை ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதன் பெட்ரோல் மாடலில் லான்ஜிடியூட் ஆப்ஷனல் என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் இப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட்டிற்கு ரூ.18.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடுத்தர விலை கொண்ட வேரியண்ட்டில் 7 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், புரொஜெக்டர் ஹாலஜன் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், 17 அங்குல அலாய் வீல் ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன.
முன்னதாக, இந்த லான்ஜிடியூட் ஆப்ஷன் வேரியண்ட்டானது டீசல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்து வந்தது. தற்போது பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும்.
இந்த மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை லிமிடேட், லிமிட்டேட் ஆப்ஷனல் மற்றும் லிமிடேட் ப்ளஸ் உள்ளிட்ட உயர் வகை வேரியண்ட்டுகளில் மட்டுமே பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நடுத்தர வகை லான்ஜிடியூட் ஆப்ஷனல் வேரியண்ட்டிலும் இப்போது வந்திருக்கிறது. விலை உயர்ந்த பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களைவிட ரூ.1 லட்சம் வரை விலை குறைவு என்பதால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக இருக்கும். தற்போது ஜீப் காம்பஸ் எஸ்யூவி ரக கார், ரூ.15.39 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. டாப் வேரியண்ட் ரூ.22.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. விரைவில் வர இருக்கும் டாடா ஹாரியர் நேரடி போட்டியாக இருக்கும். அத்துடன் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களுக்கும் இது போட்டியாக இருக்கும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating