பெண்கள் அச்சப்பட தேவையில்லை!! (உலக செய்தி)
அமெரிக்காவுடன் தாலிபன்கள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தாலிபன் சார்பாக இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட குழுவை வழிநடத்திய தாலிபன் அதிகாரியை பிபிசி நேர்காணல் கண்டது.
அந்த நேர்காணலில் அவர், ஆயுத பலம் மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றும் நோக்கம் தாலிபன்களுக்கு இல்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
ஷெர் முகம்மது அப்பாஸ்தான் தாலிபன் குழுவை வழிநடத்தியவர்.
அப்பாஸ், “ஆயுதம் மூலம் நாட்டை கைப்பற்றுவது. ஆஃப்கhனுக்கு அமைதியை கொண்டுவராது,” என்றார்.
ஆனாலும், வெளிநாட்டு படைகள் ஆஃப்கனிலிருந்து வெளியேறும் வரை அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார்.
ஐ.நா தரவுகள் படி, ஆஃப்கhனில் சாமானியர்கள் இறப்பதற்கு மற்ற தரப்புகளைவிட தாலிபன்கள்தான் அதிக காரணம்.
ஆஃப்கhனின் 70 சதவீத அச்சுறுத்தலுக்கு தாலிபன் தான் காரணமாக இருக்கிறது.
கத்தாரில் உள்ள தாலிபன் அரசியல் பிரிவுக்கு தலைமை வகிக்கும் ஷெர் முகம்மது அப்பாஸ், மாஸ்கோவில் மூத்த ஆஃப்கhன் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார். அந்த சமயத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
இதுதான் அவர் சர்வதேச ஊடகங்களுக்கு அளிக்கும் முதல் நேர்காணல்.
யுத்தத்தைவிட அமைதிதான் கடினமாக இருக்கிறது என்று பேச்சுவார்த்தையில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டி பேசினார். ஆனால், நிச்சயம் ஒரு தீர்வு எட்டப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஜல்மாய் கலில்ஜாத்துடன்கடந்த சில மாதங்களாக அப்பாஸ் மேற்பார்வையிலேயே தாலிபன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு வருகிறது.
மாதிரி ஒப்பந்தம் எட்டப்பட்டுவிட்டதாக கலில்ஜாத் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தார்.
ஆஃப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது மற்றும் எதிர்காலத்தில் ஆஃப்கானில் தாலிபன்கள் எந்தவொரு ஜிஹாதி குழுக்களையும் அனுமதிக்காமல் இருப்பது என்கிற உறுதி கூறலுடன் இந்தப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பல பிரச்சினைகள் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இருதரப்பும் சுட்டிகாட்டுகின்றன. 17 ஆண்டுகளாக தொடரும் பிரச்சினையை முடிவுக்குகொண்டுவர வேண்டும் மற்றும் அமெரிக்க துருப்புகளை ஆஃப்கானிலிருந்து திரும்ப பெற வேண்டும் என்கிற தனது விருப்பத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிப்படுத்தி உள்ளார்.
தாலிபன் படைகள் எண்ணிலடங்கா கொடிய தாக்குதல்களை ஆஃப்கன் எங்கும் நிகழ்த்தி உள்ளன.
டிரம்ப் நிர்வாகம் ஆஃப்கனில் அமைதியை கொண்டுவர விரும்புகிறதென தான் நம்புவதாக அப்பாஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
மாஸ்கோவில் நடக்கும் இந்த கூட்டத்திற்கும் அமெரிக்க – தாலிபன் அமைதி பேச்சுவார்த்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தாலிபன் குழுவுடன், இந்த கூட்டத்தில் முன்னாள் ஆஃப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கலந்துக் கொண்டனர்.
தாலிபன்கள் மையநீர்ரோட்ட அரசியல் கலந்தபின், எதிர்காலத்தில் அந்நாடு எப்படி ஆட்சி செய்யப்பட வேண்டும் என்பது உட்பட பல விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
மாஸ்கோவில் ஒரு கூட்டத்தில் பேசிய அப்பாஸ், ஆஃப்கனில் தாலிபன்கள் மட்டும் ஒற்றை சக்தியாக ஆக வேண்டுமென விரும்பவில்லை. ஆனால், ஆஃப்கன் அரசமைப்பு சட்டமானது மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. அதுதான் அமைதிக்கு பெரும் தடங்கலாக இருக்கிறது என்றார்.
ஆஃப்கனை 1996-2001 இடையிலான காலக்கட்டத்தில் தாலிபன் ஆட்சி செய்தது. ஆனால், அது மிகவும் பழமைவாத ஆட்சியாக இருந்தது.
பெண்களை மிக மோசமாக தாலிபன்கள் நடத்தினர். பெண்களை பணிக்கு செல்லவோ அல்லது பள்ளிகளுக்கு செல்லவோ அனுமதிக்கவில்லை.
ஆனால், இப்போது அப்பாஸ், தாலிபன்களின் ஆதிக்கம் ஆஃப்கனில் அதிகரித்து வருவது குறித்து பெண்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்கிறார். இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆஃப்கன் பாரம்பர்யம் வழங்கி உள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்படும் என்கிறார்.
அவர்கள் பள்ளிக்கு செல்லலாம், பல்கலைக்கழகங்களுக்கு செல்லலாம், அவர்கள் பணிக்கும் செல்லலாம் என்கிறார் அப்பாஸ்.
மாஸ்கோ கூட்டத்தில் இரண்டு பெண் ஆஃப்கன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவரான ஃப்வுஜியா கூஃபி, “இதுவொரு நேர்மறையான நகர்வு. ஆஃப்கன் மக்களுக்கு எதிராக, குறிப்பாக பெண்களுக்கு எதிராக துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தியவர்கள், இப்போது பெண்களின் குரல்களுக்கு செவிக் கொடுக்கிறார்கள்”.
தாலிபன் ஒருவர் தன்னிடம், பெண்களால் நாட்டின் ஜனாதிபதியாக முடியாது. ஆனால், அரசியலில் பங்கேற்க முடியும் என்று தெரிவித்ததாக ஃப்வுஜியா கூஃபி கூறுகிறார்.
ஆஷ்ரஃப் கனி தாலிபன்களை பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து அழைத்து வந்தார். ஆனால், இதுநாள் வரை அமெரிக்காவின் கைகளில் இருக்கும் பொம்மை அரசுதான் அஷ்ரஃப் கனிவுடையது என்று கூறி தாலிபன் அந்த அழைப்பை மறுத்து வந்தது.
அமெரிக்க அதிகாரிகள் தாலிபன்களை இணங்க செய்ய முயற்சித்தனர். எந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தனர் என்ற கேள்விக்கு அப்பாஸ் தெளிவான பதில் எதையும் கூறவில்லை.
Average Rating