தோல்நோய்களை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 55 Second

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு எளிதான பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். படை, சொரி, சிரங்கு, கரப்பான் என்று சொல்லக்கூடிய தோல் நோய்களை போக்கும் மருத்துவம் பற்றி பார்க்கலாம். இப்பிரச்னைக்கு கொத்துமல்லி, பிரம்ம தண்டு, கருஞ்சீரகம், வல்லாரை ஆகியவை மருந்துகளாகின்றன. கொத்துமல்லியை பயன்படுத்தி தோலில் ஏற்படும் சிவப்பு தன்மை, அரிப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். கொத்துமல்லி இலைகளை நீர்விடாமல் அரைத்து சாறு எடுக்கவும். இந்த சாறை தோலில் அரிப்பு, சிவப்பு தன்மை உள்ள இடத்தில் பூசிவர பிரச்னைகள் குணமாகும். அழற்சியால் ஏற்படும் தோல்நோய்கள் சரியாகும்.
ரத்தத்தில் கிருமிகளின் தாக்கம், அதிக பித்தம், உடல் உஷ்ணம் போன்றவற்றால் திடீரென தோலின்மேல் சிவந்த தன்மை, அரிப்பு ஏற்படுகிறது. கை, கால், உடலில் ஏற்படும் எரிச்சலை கொத்துமல்லியின் சாறு அடக்குகிறது. குளிர்ச்சியை ஏற்படுத்தும். தோல் அரிப்பு சரியாகும். பிரம்ம தண்டுவை பயன்படுத்தி, அலர்ஜியால் தோலில் ஏற்படும் பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பிரம்ம தண்டு இலை சூரணம் அரை ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் அதிமதுரம், சிறிது பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி காய்ச்சிய பால் சேர்த்து இரவு தூங்கப்போகும் முன்பு குடித்துவர உடலில் ஏற்படும் தடிப்பு, எரிச்சல், அரிப்பு, நீர்கசிந்து துன்பம் தரும் தோல்நோய்கள் குணமாகும். மஞ்சள் நிறபூக்களையும், கடுகு போன்ற விதைகளை உடைய பிரம்ம தண்டு, நுண்கிருமிகளை அழிக்க கூடியது. பூஞ்சை காளான்களை போக்ககூடியது. வல்லாரை, கருஞ்சீரகத்தை பயன்படுத்தி தோல்நோய்களுக்கு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதில், வல்லாரை இலையை பசையாக அரைத்து போடவும். இதனுடன் சிறிது கருஞ்சீரகம் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இந்த தைலத்தை பூசிவர தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு குணமாகும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வல்லாரை வாதம், பித்தத்தினால் ஏற்படும் தோல்நோய்களை போக்குகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கருஞ்சீரகம், வயிற்று பூச்சிகளை அழிக்க கூடியது. சிறுநீரை பெருக்கி உடலில் ஏற்படும் நச்சுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.
சிரங்கு இருக்கும்போது தோலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். கல்யாண முருங்கை இலை சாறுடன், சிறிது உப்பு சேர்த்து கலந்து இந்த சாறை பூசி 15 நிமிடங்களுக்கு பின்னர் கழுவிவர தோல் அரிப்பு சரியாகும். கல்யாண முருங்கை சிவந்த பூக்களை உடையது. இந்த இலைகள் நெஞ்சக சளியை கரைக்கும் தன்மை கொண்டது. இதை மாவில் இட்டு அரைத்து தோசையாக சாப்பிட சளி, மூட்டுவலி குணமாகும். நீரில் சிறிது உப்பு சேர்த்து குளித்துவர சொரியாசிஸ் உள்ளிட்ட தோல்நோய்கள் குணமாகும்.இடைவிடாத ஏப்பத்துக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். முறையற்ற உணவு, செரிமான கோளாறு போன்றவற்றால் ஏப்பம் வருகிறது. சோம்பு, பனைவெல்லம் சேர்த்து தேனீராக்கி குடித்துவர அடிக்கடி ஏப்பம் வருவது நீங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட அரிதான காட்சிகள்!! (வீடியோ)
Next post நக்சலைட்களுக்கான கால்சென்டர்! (மகளிர் பக்கம்)