முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு பிடிவிராந்து !! (உலக செய்தி)

Read Time:2 Minute, 8 Second

ஆப்பிரிக்க நாடான சிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வந்தவர் ராபர்ட் முகாபே. அவருக்கு தற்போது 94 வயது ஆகிறது.

கடந்த ஆண்டு புரட்சி மூலம் அவரது ஆட்சி அகற்றப்பட்டது. ராபர்ட் முகாபேவியின் 2 வது மனைவி கிரேஸ் முகாபே. 53 வயதான இவர் ராபர்ட் முகாபேவின் செயலாளராக இருந்து வந்தார். 1996 இல் ராபர்ட் முகாபே கிரேசை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு கிரேசை ஜனாதிபதியாக்க முகாபே முயற்சி செய்தார். இதனால் தான் அவரது ஆட்சியை புரட்சி மூலம் வெளியேற்றினார்கள்.

தற்போது ராபர்ட் முகாபே சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் கிரேசும் இருப்பதாக தெரிகிறது. கிரேஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜோகன்ஸ்பர்க் ஓட்டலில் மாடல் அழகி கேபரில்லா என்பரை தாக்கினார்.

மின்சார வயரால் சரமாரியாக தாக்கியதாகவும், இதில் காயம் அடைந்ததாகவும் கேபரில்லா கூறினார். அதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் கிரேஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கிரேசுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து சிம்பாப்வே பொலிஸார் சர்வதேச பொலிஸ் உதவியுடன் அவரை கைது செய்வதற்காக பிடிவிராந்தை சர்வதேச அளவில் வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே கிரேஸ் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மயக்கம்… குழப்பம்… கலக்கம்!(அவ்வப்போது கிளாமர்)
Next post ஆயுதமல்ல அந்தரங்க உறவு!!(அவ்வப்போது கிளாமர்)