கலங்காதே… தயங்காதே…!!(மருத்துவம்)
மனம் என்பது நிலையில்லாமல் மாறிக் கொண்டிருக்கக் கூடியது என்பதால்தான் அதனை குரங்கு என்றார்கள். சூழ்நிலைகளில் ஏற்படுகிற மாற்றம் நமது மனநிலையிலும் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்போம். உற்சாகம், சோகம், கோபம் என்று இப்படி ஊசலாடும் மனநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்று மன நல மருத்துவர் பிரிசில்லாவிடம் கேட்டோம்…
மூளையின் செரோட்டோனின் என்கிற வேதியியல் சமநிலையற்ற மாற்றங்கள் மற்றும் மாதவிடாய் ஹார்மோன் சுழற்சி தொடர்புடைய மாற்றங்கள் அல்லது மாதவிடாய் நிறுத்தம், போதை மருந்து மற்றும் ஆல்கஹால் பாதிப்பு என பல்வேறு காரணிகளால் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. பொதுவாக காலை மற்றும் இரவு நேரங்களில் ஹார்மோன் சுரப்பிகள் பலவகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
மன அழுத்தம், பதற்றம், பயம் குறைந்த மனநிலை ஆகியவை இல்லாத நல்ல அறிகுறிகள் காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் இதமான உணர்வுகளும் கிடைக்கிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சக்தி குறைந்த பலவீனமான மன நிலையை பெறுகிறோம். இதனால்தான் பெரும்பாலான மக்கள் அதிகாலையில் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
காலை நேரங்களில் வேலை பற்றிய பரபரப்பு மட்டுமே பெரும்பாலானோருக்கு இருக்கிறது. மாலை நேரங்களில் நமது மூளையானது காலை முழுவதும் செய்த செயல்கள் முழுவதும் மிகத்தீவிரமாக அதனை திரும்பி திரும்பி யோசனை செய்யும் ஒரு ஒலிப்பதிவு கருவி போன்று, எல்லாவித செயல்கள் பற்றி திரும்ப யோசிக்க செய்யும். நாம் செய்யாததை அல்லது செய்ய வேண்டியவை பற்றி நமக்குள்ளே யோசனை செய்வோம்.
நான் இதை செய்ய விரும்புகிறேன், அதை செய்திருக்கலாம் இதை செய்து இருக்கலாம் அல்லது அதனை செய்யவில்லையே என்று சிந்தனைகள் வரும்.
அதேபோல நம்மை சமநிலையான நபர்களை என நினைக்கிறோம். ஆனால் உங்கள் வாழ்க்கை முறையாக நீங்கள் விழித்திருக்கும் நேரங்களில் அனைத்தும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
வீட்டிலும் வேலையிலும் இது பெரும்பாலும் நம் உணர்வுகளை மூழ்கடிக்க வைக்கும். அருமையான வாழ்க்கை முறை அமைத்துக் கொள்ளவும், அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்க்கை வாழ கொஞ்சம் கொள்கை மற்றும் வழிமுறைகளை பின்வருமாறு அமைத்துக் கொள்ளுங்கள்.
தகவல் தொடர்பில் சிறப்பாக இருப்பது…
உங்கள் மேலதிகாரி உடன் பணிபுரியும் நபர் மனைவி அல்லது கணவன் குழந்தைகள் நண்பர்கள் மற்றும் பிறரிடம் உங்களைப் பற்றி தவறான புரிதல்கள் ஏற்படாத வண்ணம் இருங்கள். தவறான புரிதல் ஏற்பட்டால் தெளிவுபடுத்துங்கள். இதன் மூலம் உங்களின் யோசனைகள், விருப்பங்கள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்படும். சரியாக தகவல் தொடர்பு இல்லாவிட்டால் அந்த நாளின் முடிவில் விரக்தியே மிஞ்சும்.
எதிர்வினையைத் தாமதப்படுத்துங்கள்
முதலில் பேசுவதற்கு முன் சிந்தித்து பேசுங்கள். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் கட்டுப்பாட்டுடன் எதிர்வினைகளை ஆற்றுங்கள். எப்போதும் அமைதியாக பேசுவதை உறுதிப்படுத்துங்கள். வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுங்கள். மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்தாதீர்கள். தனிநபர் மீது தாக்குதலை தள்ளி வைத்து, சூழ்நிலைகளை ஆராய்ந்து பிரச்னைக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடியுங்கள்.
நேர மேலாண்மை முக்கியம்
இது முக்கியமான மந்திரம். நீண்ட நேரம் தொடர்ச்சியாக வேலை செய்வதைத் தவிருங்கள். புத்திசாலித்தனமாக வேலை செய்யுங்கள். உங்கள் நேரத்தை அபூர்வமாகவும் உங்களின் செயல்பாட்டிற்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் மாற்றிக் கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு அதிக நேரம் மிச்சப்படும். தேவையான ஓய்வு கிடைக்கவும் உதவும். இது நேரம் செலவழிப்பதில்லை.
தனிப்பட்ட உறவு திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்
கடுமையாக பணிபுரிவது முக்கியமே இல்லை உங்களின் உறவை அலுவலகம் மற்றும் வீடு ஆகியவற்றுக்கான சிறப்பாக நிர்வகிப்பதுதான் முக்கியமானது. உதாரணமாக உங்களின் பாஸ் மற்றும் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள்.
உங்களின் தினசரி பிரச்சினைகள் தீரும் மற்றும் வீட்டிலுள்ள நேர்மறை அதிர்வுகளை உருவாக்குவதில் நீங்கள் வெற்றிகரமாக செய்தால் நீங்கள் கிட்டத்தட்ட விழித்திருக்கும் எல்லா நிறங்களும் உங்களுக்கு படிப்படியான மன அமைதி மற்றும் நிம்மதியாக இருக்க முடியும். தனிப்பட்ட உறவுகள் வளமான மண்ணாக அமைந்துவிட்டால் எல்லாவித வெற்றிகளை உங்கள் வாழ்வில் வளரும்.
உங்களை ஒழுங்கமைக்கவும் எந்த தங்கு தடையின்றி உங்கள் இலக்குகளை அடைய மற்றும் தினந்தோறும் செயல்கள் ஒருகமைக்க உங்களுக்கு எது முடிந்தது செய்யவேண்டும் என்பது தெரிய வேண்டும். இவை உங்களின் உணர்ச்சிகரமான விளைவுகளைக் குறைக்க முடியும் .கதைபோல பள்ளி கல்லூரி சந்தை வியாபாரம் அரசியல் முதலியன முன்னுரிமை மற்றும் சீராக அமையும். இதனால் பதட்டம் மற்றும் ஏமாற்றங்களை எளிதாக எடுத்துக் கொள்ள உதவும்.
உங்களின் தீர்வையும் அறிவையும் மேம்படுத்த வேலை வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்ள உங்கள் நேரத்தை முதலீடு செய்யுங்கள். மென்பொருட்களை கற்றுக் கொள்ளுங்கள், எப்படி சமைக்க வேண்டும் சுத்தம் செய்ய வேண்டும், எப்படி கழுவவேண்டும் நீங்களே வண்டி ஓட்டுங்கள். இவற்றை செய்யும் போது நீங்கள் சுதந்திரமாக உணர்வீர்கள் கணவர் பணிப்பெண் உதவியாளர் என யாரையும் சார்ந்து இல்லாமல் இருந்தால் உங்களது தேவையற்ற மன அழுத்தம் வருவது குறையும்.
உடற்பயிற்சி மற்றும் சீரான உணவு எடையை பராமரித்தல் மற்றும் ஒழுங்கான உடற்பயிற்சி ஆரோக்கிய உடல் எடை பராமரித்தல் உங்கள் வாழ்க்கையில் நீண்ட ஆயுள் மற்றும் சந்தோஷம் கூடும் மற்றும் மன அழுத்தம் குறைய ரத்தம் சீராக அமையும். உயிருக்கு ஆபத்தான நோய்கள் புற்றுநோய் நீரிழிவு நோய் இருதய நோய் ஆன்ட்டியோபோரோசிஸ் உடல் பருமன் போன்றவை குறிப்பிடத்தக்க அளவில் குறையும்.
குடும்பம் நண்பர்கள் மற்றும் உறவினரிடம் நேரத்தை செலவிடுங்கள்எலக்ட்ரானிக்கல் மற்றும் சமூக வலைதளங்கள் அதிக நேரம் செலவிடுவது மூலம் நாம் சமூகத்தை விட்டு தனிமைப்பட்டு அடிமையாகி மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் உங்களுக்கு பதிலாக உங்கள் குடும்பத்தாரிடம் நேரம் செலவிட மற்ற யாராலும் முடியாது.
குழந்தைகள் சின்ன சின்ன விஷயங்கள் ஒன்றாக சேர்த்து ஒன்றாக சாப்பிடுங்கள் அல்லது பேட்மின்டன் அல்லது தோட்ட வேலைகள் ஒன்றாக குடும்பத்துடன் செய்யும் போது அது உங்கள் மூளைக்கு ஒரு சிறந்த மருந்தாக மற்றும் எனர்ஜியாக இருக்கும்.
அதிக நேரம் உங்களின் குடும்பத்துடன் மற்றும் நண்பரிடம் தலைவர்களின் மூளை மகிழ்ச்சியான தருணங்களும் துன்பங்களும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இதனால் உங்கள் மூளைக்கும் மூளைக்கு மிக நல்லது .அதனால் மறந்துவிடாதீர்கள் இது மிக முக்கியமான பகுதி உங்களின் வாழ்வில் சந்தோஷம் மற்றும் அமைதியாக அந்த நாள் முழுவதும் அமையும்.
Average Rating