சுவாசகோச முத்திரை!!சுவாசகோச முத்திரை!(மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 31 Second

உடலுக்குத் தேவையான ஆக்சிஜன், சுவாசித்தலின் போது கிடைக்கிறது. காற்று எவ்விதத் தடையும் இன்றி நமது நுரையீரலுக்குள் செல்வதாலேயே உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மனநிலை மாற்றம், எரிச்சல், மனச்சோர்வு, தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, ஹார்மோன் கோளாறுகள் ஏற்படுகின்றன. ஆஸ்துமா எனப்படும் இரைப்பு நோய், பொதுவாக குளிர், மழைக்காலம் அல்லது தூசி ஒவ்வாமை போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

நுரையீரலில் சளி அடைத்துக் கொண்டு, காற்று உள்ளே புக முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இருமல், இரைப்பு, இருமினாலும் சளிவெளிவராமை, மூச்சுத்திணறல், காற்றுக்காக ஏங்குதல், மூச்சடைப்பு ஏற்படுகிறது. இதற்கான நிரந்தரத் தீர்வை மருந்துகள் மூலம் அடைய முடிவது இல்லை. சுவாசகோச முத்திரை இதற்குத் தீர்வு அளிக்கிறது. சுவாசகோச முத்திரையானது, நீரைக்குறைத்து, வெப்பம் மற்றும் ஆகாயத்தைச் சமன்படுத்தி, காற்றை அதிக அளவில் உடலுக்குள் செல்ல அனுமதிக்கிறது.

எப்படிச் செய்வது:

பெருவிரலில் உள்ள அடிரேகை, நடுரேகை மற்றும் நுனியைக் கவனிக்க வேண்டும். பின்னர் சுண்டு விரலால் கட்டை விரலின் அடிரேகையையும் மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையைத் தொட்டும், நடுவிரலின் நுனியால் கட்டை விரலின் நுனியைத் தொடவேண்டும். ஆள்காட்டி விரலை மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்டி வைக்கவேண்டும். இந்தமுத்திரையில் கையின் உள்ளங்கைப் பகுதி வெளிநோக்கிப் பார்க்க, ஆள்காட்டி விரலை 90டிகிரி மேல் நோக்கி வைத்திருக்க வேண்டும். கையை கவிழ்த்து வைத்தோ,கீழ் நோக்கியோ செய்யக்கூடாது.

விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டோ, நாற்காலியில் அமர்ந்தோ கால்களை தரையில் ஊன்றியோ, அவசர காலத்தில் படுத்த நிலையிலோ இந்த முத்திரையைச் செய்யலாம். ஒருநாளைக்கு குறைந்தது 5 முதல் 6 முறை செய்யலாம். அல்லது இரைப்பு, இருமல் குறையும் வரை செய்து கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு முறையும் 5 முதல் 40 நிமிடங்கள் வரைசெய்யலாம். தீவிரமான இரைப்பு இருக்கும் காலங்களில் நேரம் கணக்கிடாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.

பலன்கள்

குழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படும் இரைப்பிருமல் கட்டுக்குள் வரும். இரைப்பிருமல் ஏற்பட்டு, தீவிர நிலையில் மூர்ச்சையாதல் மற்றும் உயிரிழப்பில் இருந்தும் காக்கக்கூடியது. இதற்கு எந்தநிலையில் இருந்தாலும், எவ்வளவு நேரமானாலும் செய்யலாம். மழைக்காலங்களில் நெஞ்சில் சளி உருவாவது தடுக்கப்படும். மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் இறுக்கம், இரைப்பிருமல் ஆகியவை குறையும். மன அழுத்தம் மிகுந்த வேலையில் இருப்போருக்கும், இயல்பிலேயே சிலருக்கும் மூச்சு மேல் சுவாசமாக ஆழம் இல்லாமல் இருக்கும். இந்த முத்திரையைச் செய்து வர, சில வாரங்களில் அவர்களது மூச்சு ஆழ்ந்து செல்லத் தொடங்கும். மனஅழுத்தம் குறையும்.

ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்து வர, 3 மாதங்களில் நோயின் தீவிரம் குறையும். மூச்சு விடுதல் எளிமையாகும். இன்ஹேலர் பயன்படுத்துவதாக இருப்பின் அதன் அவசியமும் படிப்படியாகக் குறையும். இரைப்பிருமல் வரத்தொடங்கி ஆரம்ப நிலையில் இருக்கும் எல்லா குழந்தைகளும் இந்த முத்திரையை தினமும் செய்யவேண்டும்.இன்ஹேலர் பயன்படுத்தும் நிலை வருவதற்கு முன், இந்த முத்திரையைச் செய்து வர ஆஸ்துமா வராது. ஆஸ்துமா நோய் வராமல், வருமுன் காக்க இந்த முத்திரை உதவும்.இன்ஹேலர், மருந்துகள், மருத்துவர் இல்லாத சமயங்களில் இந்த முத்திரை முதலுதவியாக மூச்சுத்திணறல் குறையும் வரைபயன்படுத்தலாம். சளி தொந்தரவுகள், தும்மல், அலர்ஜி ஆகியவை சரியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் உடற்பயிற்சி வளரும் ஞாபகசக்தி!!(மகளிர் பக்கம்)
Next post தலை துண்டிக்கப்பட்ட பிறகும் 18 மாதங்கள் உயிருடன் இருந்த அதிசய கோழி!(வீடியோ)