தேர்தல் ஆரம்பம் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு! (உலக செய்தி)
மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் திகதிகளை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது.
அதன்படி சத்தீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் 20 ஆம் திகதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளிலும், மிசோரமில் உள்ள 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியதால், பிற்பகல் 3 மணிக்கு நிறைவடையும். மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட 1.80 லட்சம் பேர் தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மிசோரம் மாநிலத்தை பொருத்தவரை அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த இரு மாநில தேர்தல்களின் வாக்குகளும் டிசம்பர் 11 ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் தெரியும். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரம் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் அங்கு முகாமிட்டு சூறாவளி பிரசாரம் செய்தனர்.
மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் பாஜக தீவிர பிரசாரம் செய்திருக்கிறது. ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கட்சியின் மாநில தலைவர் கமல் நாத் நம்பிக்கை தெரிவித்தார். மத்திய பிரதேச மக்கள் மீது நம்பிக்கை இருப்பதாகவும், அப்பாவி மக்களை பாஜக நீண்ட காலம் சுரண்டியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating