ஆண்களின் செக்ஸ் பிரச்னைகள்!!(அவ்வப்போது கிளாமர்)
இறைவி’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா சொல்வது போல ஆண் என்பவன் நெடில். அவனுக்கு இயல்பாகவே பெண்ணை விட தான் உயர்ந்த இனம் என்ற எண்ணம் இருக்கும். பெண் மீது எந்தவிதக் குற்ற உணர்வும் இன்றி ஆண் ஆதிக்கம் செலுத்த இந்த எண்ணமே காரணம் ஆகிறது. தன் ஆண்மையின் மீது ஆணுக்கு எப்போதுமே ஒரு பெருமித உணர்வுள்ளது. தன் பாலியல் திறனையும் ஆண்மையின் ஒரு பகுதியாக ஆண்கள் பார்க்கின்றனர். உடலுறவிலும் பெண்ணைத் தன் ஆண்மையின் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கவே ஆண் விரும்புகிறான்.
இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட ஆணின் பாலுறவுத் திறன் குறைவது மனதளவில் ஆணுக்கு பிரச்னையை உருவாக்குகிறது. தன்னால் ஒரு பெண்ணை பாலுறவில் முழுமையாகத் திருப்திப்படுத்த முடியவில்லை என்பதை ஆண் மனம் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது. இப்படி ஒரு பிரச்னை தனக்கு இருக்கிறது என்பதை ஆண் ஏற்றுக் கொள்ள மறுப்பதால் தான் இதற்கு மருத்துவம் செய்து கொள்ள உடனடியாக ஆண் முன் வருவதில்லை.
தனக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை. ஆனால், ஆண் பாலியல் ரீதியாகச் சந்திக்கும் பிரச்னைகளுக்கு உடலில் ஏற்படும் வேறு ஏதாவது ஒரு உடல்நலக் குறைபாடு கூடக் காரணமாக இருக்கலாம். எனவே, பாலியல் உறவில் ஆணுக்கு பிரச்னைகள் துவங்கும் ஆரம்ப காலத்திலேயே தயக்கம் இன்றி மருத்துவரை அணுகித் தீர்வு காணலாம். ஆணுக்கான பாலியல் பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும் குறித்து விளக்குகிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவரான கபிலன்.
பாலுறவில் ஆர்வமின்மை
உடல்ரீதியான, உளவியல்ரீதியான காரணங்களால் ஆணுக்கு தாம்பத்ய உறவில் ஆர்வம் இன்றிப் போகலாம். டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் உற்பத்தி குறையும்போதும் தாம்பத்ய உறவில் ஆணுக்கு நாட்டம் குறையும்.
ஆணுக்கு ஏற்படும் பதற்றம், மன அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், நரம்பியல் பிரச்னைகள், சிறுநீரகப் பிரச்னைகள் இப்படிப் பல காரணங்கள் இருக்கலாம். பருவம் அடைந்ததில் இருந்தே கூட சிலருக்கு ஆர்வம் குறைவாக இருக்கும். இவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்துக் காரணத்தைக் கண்டறியலாம். ஹார்மோன் குறைபாடாக இருக்கும் பட்சத்தில் ஹார்மோன் ரீபிளேஸ்மெண்ட் செய்ய முடியும்.
ஒரு சிலர் திருமணத்துக்குப் பின் தாம்பத்யத்தில் எந்தப் பிரச்னையும் இன்றி இருப்பார்கள். ஒரு சில மாதங்கள் அல்லது வாரங்கள் மட்டுமே ஆர்வம் இன்மை பிரச்னை காணப்படும். இதற்கு தம்பதியரிடம் மன ஒற்றுமை குறைவாக இருப்பதே காரணம்.
வேலை நெருக்கடி, மன அழுத்தம் கூடக் காரணமாக இருக்கலாம். வேறு ஏதாவது நோய்க்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் தாம்பத்ய உறவில் ஆர்வம் குறைக்கலாம். சரியான காரணத்தைக் கண்டறிந்தால் அதற்கான சிகிச்சை அளித்து சரி செய்ய முடியும்.
திருமணத்துக்குப் பின்னும் எப்போதும் மனதை உற்சாகமாக வைத்திருக்க வேண்டும். உடற்பயிற்சி, 7 முதல் 8 மணி நேரம் வரை கட்டாய உறக்கம். ஆரோக்கியமான உணவு முறையினையும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு சிலர் திருமணமான புதிதில் அதிகளவில் உணர்ச்சி வசப்படுவதால் எதையும் முறையாகச் செய்ய முடியாமல் போகலாம். இது அவரவரின் மனநிலையைப் பொறுத்தது. சில ஆண்களுக்கு அதிகப்படியான செக்ஸ் உணர்ச்சிகள் இருக்கும். அதிக முறை செக்ஸ் தேவைப்படலாம். திருமணத்துக்குப் பின் மனைவியும் அதே அளவு செக்ஸ் உணர்வுள்ளவராக இருந்தால் பிரச்னை எதுவும் வராது.
அதீத ஆர்வம்
தன்னுடைய சக்தியை மீறி சிலர் அதிக செக்ஸ் உணர்ச்சியில் ஈடுபடுவார்கள். இதுபோன்ற ஆண்களுக்கு தூக்கமின்மை மற்றும் உடல் சோர்வும் காணப்படும். ஏற்கனவே, சர்க்கரை போன்ற உடல் குறைபாடுகள் இருந்து உடலுறவின்போது அதிக உணர்ச்சி வசப்பட்டால் அவர்கள் ஆணுறுப்பு விறைப்புத் தன்மை அடையாமல் போகலாம்.
இதுபோன்ற சூழலில் ஆணுக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படும். நம்மால் எதுவும் முடியாதோ என்ற பயத்தை உண்டாக்கும். இது கணவன் மனைவி உறவிலும் பிரதிபலிக்கும். உடலுறவின்போது அதிகபட்சமாக உணர்ச்சிவசப்படாமல் சம நிலையில் அணுகவும்.
விறைப்புத்தன்மை குறைதல்உடலுறவின்போது ஆணுக்கு ஏற்படும் இன்னொரு பிரச்னை ஆணுறுப்பு விறைப்புத் தன்மை குறைதல்.
பொதுவாக தாம்பத்ய உறவில் ஆர்வமின்மை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆணின் வளர்ப்பு முறை இது போன்ற பிரச்னைகளை உருவாக்கலாம். சிறு வயதில் இருந்தே செக்ஸ் என்றால் தவறு என்ற எண்ணத்துடன் அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கலாம். மனரீதியான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவருக்கும் இதுபோன்ற பிரச்னைகள் இருக்கலாம்.
இவர்களுக்கு ரத்த ஓட்டத்தை பாதிக்கும் நோய்கள் இருக்கலாம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, தமனித் தடிப்பு, தமனிச்சுருக்கம், நரம்புப் பிரச்னைகள் அல்லது வேறு நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் காரணமாக இருக்கும். இவர்களுக்கு மருந்துகள் மற்றும் Penile prosthesis வரை சிகிச்சைகள் உண்டு.
விரைவாக விந்து வெளியேறுவதுஉடலுறவின்போது ஆணும் பெண்ணுமாய் விளையாடி இருவரும் இன்பத்தின் உச்சத்தை அடையும்போது ஆணுக்கு விந்து வெளியேற்றம் நடக்க வேண்டும். இதுவே இருவருக்கும் அதிகபட்ச இன்பத்தைத்தரும்.
ஆனால், ஆணுக்கு சில நேரங்களில் இதற்கு முன்பாகவே விந்து வெளியேற்றம் நடப்பது உடலுறவில் பிரச்னையாகத் தோன்றும். இது புதிதாகத் திருமணமானவர்கள் மத்தியில் அதிகளவில் காணப்படும்.
இந்த சூழலில் அதிகளவில் உணர்ச்சிவசப்படுவதால் விரைவான விந்து வெளியேற்றம் காணப்படும். இவர்கள் இரண்டாவது முறை முயற்சிக்கும் போது சரியாகிவிட வாய்ப்புள்ளது. sqeeze technique சொல்லிக் கொடுத்து இப்பிரச்னைக்குத் தீர்வு காண்போம்.
வேறு சிலருக்கு அதிக கைப்பழக்கப் இருந்தால் உடலுறவின்போது விரைவான விந்து வெளியேற்றம் காணப்படும். விரைப்புத் தன்மை குறைவாக இருப்பவர்களுக்கும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மருந்துகள் மூலம் இது போன்ற பிரச்னைகளைச் சரி செய்ய முடியும்.
ஆண் என்ன நினைக்கிறான்?!
பாலுறவில் நான் பர்ஃபெக்ட், எனக்கு எந்த விதமான ஆண்மைப் பிரச்னையும் இல்லை என்ற திருப்தியை ஆண்கள் விரும்புகின்றனர். அப்போதுதான் ஆண் பெண் இணைந்து வாழும் இல்லற வாழ்க்கை இனிமையாக நகரும். தாம்பத்ய வாழ்வில் உண்டாகும் சின்னச் சின்னக் குறைபாடுகள் இருவருக்குள்ளும் மன ரீதியான அழுத்தங்களை உருவாக்கும்.
பெண் இதை வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், இவள் நம்மைப் பற்றி என்ன நினைப்பாள், மதிக்காமல் நடந்து கொள்வாளோ, நம் குறையை வெளியில் சொல்லி விடுவாளோ, இல்லை தாம்பத்ய இன்பத்துக்காக வேறு துணையை நாடுவாளோ என்பது போன்ற கேள்விகள் ஆணின் மனதுக்குள் ஏற்படும் போது மனைவியை சந்தேகப்படும் நிலைக்கு ஆண் தள்ளப்படுவான். இருவருக்கும் இடையிலான உறவை பலவீனம் அடையச் செய்து வாழ்வை நரகம் ஆக்கும்.
உடலுறவில் ஆணுக்கும், பெண்ணுக்கு முழு திருப்தி அவசியம். ஒருவரை ஒருவர் இன்பத்தால் மூழ்கடித்தோம் என்ற எண்ணமே அவர்களுக்கு இடையில் எல்லையற்ற அன்பையும், பிணைப்பையும் ஏற்படுத்தும். உடலுறவின் போது குறைந்தபட்சம் பெண்ணுறுப்பை Penetrate பண்ணும் அளவுக்கு ஆணுறுப்பில் விரைப்புத்தன்மை இருக்க வேண்டும். உடலுறவின் உச்சகட்டமாக அவர்கள் பரவச நிலையை எட்ட வேண்டும். இந்தப் பரவச நிலையில் பெண்ணுறுப்பில் விந்து செலுத்தப்பட வேண்டும். இதற்கு மேல் உடலுறவில் ஈடுபடுவதென்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.
சில ஆலோசனைகள்
* உடலுறவின்போது ஆண் ஒரு ரோபோவைப் போல இல்லாமல் ரொமான்டிக்காக அணுகலாம். அளவில்லா அன்பும் காதலும் உடலுறவின்போது ஆண் பெண்ணிடம் வெளிப்படுத்த வேண்டும். இந்தப் பொழுதில் சின்னச் சிணுங்கலும் பல அர்த்தம் தந்திடும்.
* பார்ட்னருடன் அதிக நேரம் உடன் இருக்க வேண்டும். அவர்களுக்கிடையே உள்ள டென்ஷன் மறக்க வேண்டும். உடலுறவுக்கே ‘செம’ மூடில் துவங்கி, உற்சாகம் குறையாமல் இயங்கி, முடிந்த பின்னும் முடியாதது போன்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஏற்ப ஆண் தன்னுடலை ஹெல்த்தியாகப் பராமரிப்பது அவசியம்.
* உடலுறவின்போது முழுத் திருப்தியை எட்ட பார்ட்னர் இடையே மனக்கசப்பு இருக்கக் கூடாது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதிக காலம் உடலுறவில் திருப்தியாக உள்ளவர்களின் ஆயுளும் அதிகமாக இருக்கும். நீண்ட ஆயுளும் அன்பும் உங்கள் வாழ்வை இனிதாக்கட்டும். பாலியல் குறைபாடுகளை ஆண்மைக் குறைபாடாக எண்ணாமல் துவக்கத்திலேயே சரி செய்து உங்களது இணையை இன்பத்தில் மூழ்கிடச் செய்யுங்கள். உங்களால் முடியும் நம்புங்கள்!
Average Rating