விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார் முதல் பெண் விண்வெளி சுற்றுலாப் பயணி

Read Time:1 Minute, 33 Second

Vinveli.jpgஉலகின் முதல் பெண் விண்வெளி சுற்றுலாப் பயணியான அனெüஷா அன்சாரி (40) விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை (ஐஎஸ்எஸ்) சென்றடைந்தார். விண்வெளிக்கு அவரை அழைத்துச் சென்ற ரஷிய “சோயுஸ்’ விண்கலம் புதன்கிழமை விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து ரஷிய “சோயுஸ்’ விண்கலம் கடந்த திங்கள்கிழமை விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டது.

ஈரானில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் பெண் தொழிலதிபரான அனெüஷா அன்சாரி, உலகின் முதல் பெண் விண்வெளி சுற்றுலாப் பயணியாக அதில் சென்றார்.

அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாள்கள் இருந்துவிட்டு பூமிக்குத் திரும்புவார். அவருடன் சென்ற ரஷிய விண்வெளி வீரர் மிகையீல் தியூரின், அமெரிக்க விண்வெளி வீரர் மைக்கேல் லோபஸ் அல்ஜீரியா ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கி இருந்து பணியாற்றுவர்.

Vinveli.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சதாம்உசேன் வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி டிஸ்மிஸ் எதிர்ப்பு தெரிவித்த சதாம் உசேன் வெளியேற்றப்பட்டார்
Next post காவல்துறை மா அதிபரின் தலைமையில் சமரச மாநாடு