சீன பொருட்களுக்கு புதிதாக வரி விதிப்பு!!(உலக செய்தி)

Read Time:2 Minute, 10 Second

இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு தலா 50 பில்லியன் ​டொலர் அளவுக்கு கூடுதல் வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய இந்த மோதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.

அதாவது இரு நாடுகளும் பரஸ்பரம் புதிய வரி அறிவிப்பை வெளியிட்டு உள்ளன. அதன்படி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 பில்லியன் டொலர் அளவுக்கு அமெரிக்கா வரிவிதித்து உள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின் துடைப்பான் முதல் இணையதள கருவிகள் வரை இந்த வரி விதிப்பு பொருந்தும்.

இதைப்போல அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயு முதல் குறிப்பிட்ட ரக விமானங்கள் வரையிலான பொருட்களுக்கு 60 பில்லியன் டொலர் அளவுக்கு புதிய வரி விகிதத்தை சீனா அறிவித்து உள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு நடைமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான வர்த்தக மோதலை தீவிரப்படுத்தி இருந்தாலும், இதை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். எனினும் அதற்கான காலத்தைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல் உப்பின் பயன்கள்!!(மருத்துவம்)
Next post மும்தாஜ் ஆர்மி – திரளான நடிகைகள் பங்கேற்பு !!(சினிமா செய்தி)