கல் உப்பின் பயன்கள்!!(மருத்துவம்)

Read Time:3 Minute, 1 Second

கல் உப்பை பயன்படுத்துவது தான் உடலுக்கு நல்லது. செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் கல் உப்பின் பங்களிப்பு இன்றியமையாதது. உண்ணும் உணவின் சுவையை உயர்த்துவதற்கு உப்பு அத்தியாவசியமானது. தினமும் ஒருவர் ஒரு டீஸ்பூன் உப்புதான் பயன்படுத்த வேண்டும் என்பது உணவியலாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது. ஆனால் பெரும்பாலானோர் அளவுக்கு அதிகமாகவே உப்பை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்புதான் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. அதை விட கல் உப்பை பயன்படுத்துவதுதான் உடலுக்கு நல்லது. அதில் 80-க்கும் மேற்பட்ட தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன. அவை உடல் இயக்கத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் பக்கபலமாக அமைந்திருக்கின்றன. தூள் உப்பை வெண்மை நிறத்துக்கு மாற்றுவதற்காக பலகட்டமாக சுத்திகரிக்கப்படுகின்றன.

அவ்வாறு சுத்திகரிக்கப்படும் போது உப்பில் உள்ளடங்கி இருக்கும் இயற்கையான தாதுக்களின் வீரியம் குறைந்து விடுகிறது. மேலும் சுத்திகரிப்புக்காக சிலவகை ரசாயனங்களும் சேர்க்கப்படுகின்றன. ஆனால் கல் உப்பில் அத்தகைய ரசாயனங்கள் இல்லாததால் பக்க விளைவுகளும் ஏற்படாது. செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் கல் உப்பின் பங்களிப்பு இன்றியமையாதது. உடலில் உள்ள இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

எடை குறைப்புக்கும் வழிவகை செய்கிறது. கல் உப்பில் உள்ள இயற்கை தாதுக்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் துணை புரிகின்றன. கல் உப்பு உடலுக்கு குளிர்ச்சி தரும். அதில் இருக்கும் பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க வழிவகை செய்யும். வாத நோய், வீக்கம் போன்றவற்றுக்கு வலி நிவாரணம் அளிக்கும். தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்கள் கல் உப்பை துணியில் கட்டி, சுடுநீரில் முக்கி ஒத்தடம் கொடுத்து வரலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும். உடலில் பி.எச் சமநிலையை பராமரிக்கவும் கல் உப்பு உதவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அபிராமி பற்றி முதல் முறையாக கணவர் கூறியது|!!(வீடியோ)
Next post சீன பொருட்களுக்கு புதிதாக வரி விதிப்பு!!(உலக செய்தி)