கேன்சர் பாதித்த நடிகைக்கு விக் அனுப்பிய ஹீரோயின் (சினிமா செய்தி)
காதலர் தினம்’ படத்தில் நடித்தவர் சோனாலி பிந்த்ரே. அப்படத்தில் அவரது நடிப்பும், அழகும் பாராட்டு பெற்றது. பல்வேறு இந்தி படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென்று ஒரு மெசேஜ் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் சோனாலி. கேன்சரால் பாதித்திருப்பதாக அவர் தெரிவித்ததையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் அவர் குணம் அடைய பிரார்த்திப்பதாக ஆறுதல் கூறி மெசேஜ் பகிர்ந்தனர்.
அமெரிக்காவில் தங்கி கேன்சர் பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வரும் சோனாலி சமீபத்தில் தனது தலை முடியை முற்றிலுமாக ஷேவ் செய்து மொட்டை தோற்றத்துக்கு மாறினார்.
அவரது தோற்றத்தை கண்ட நடிகை பிரியங்கா சோப்ரா, ‘உனது அழகான கூந்தலை நீ இழந்திருப்பது மன வருத்தம் அளிக்கிறது’ என்று ஆறுதல் வார்த்தைகள் கூறியதுடன் அமெரிக்காவில் உள்ள பிரபல விக் நிறுவனம் ஒன்றில் சோனாலிக்காக ஸ்பெஷலான விக் ஆர்டர் செய்து அனுப்பி வைத்தார். அதை பெற்றுக்கொண்ட சோனாலி, பிரியங்கா சோப்ராவுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் எந்நேரமும் தலையில் விக் அணிந்திருக்காமல் மொட்டை தோற்றத்துடன் தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் புத்தக தினத்தன்று கையில் ஒரு புத்தகத்துடன் தனது புகைப்படத்தை வெளியிட்டு மெசேஜும் வெளியிட்டிருந்தார். ‘இன்று புத்தக தினம் இதை கொண்டாடுவதற்கு சிறப்பான வழி சிறந்த புத்தக்கத்தை படிப்பதுதான். ரஷ்யா வரலாற்றை சொல்லும், ஏ ஜென்டில்மேன் இன் மாஸ்கோ புத்தகத்தை படிக்க தொடங்கியிருக்கிறேன். அதன் தொடக்கமே மிகவும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. அந்த புத்தகத்தை படித்து முடிப்பதற்கு காத்திருக்கப்போவதில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating