கணய புற்றுநோயால் உயிரிழந்த பிரபல பாடகி !!(சினிமா செய்தி)

Read Time:2 Minute, 9 Second

ஹாலிவுட் நட்சத்திரமாக முடிசூட்டப்பட்டவரும் பாரமரியமான கிளாசிக் பாடல்களை பாடியவறுமான அரேத்தா ஃப்ராங்ளின் தனது 76 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

சிறுவயது முதலே பாடல்களை பாடி உலகம் முழுதும் அமெரிக்காவின் கலாச்சார சின்னமாக விளங்கிய அவர் 18 கிராமி விருதுகள் பெற்றுள்ளார். 1987 ஆம் ஆண்டு ராக் அண்டு ரோல் வாழ்த்தரங்கில் பங்கேற்ற முதல் பெண் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கணய புற்றுநோய் காரணமாக தனது இசைப் பயணத்தில் இருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்ற இவர், நேற்று அவரது வீட்டில் காலமானார். அமெரிக்க மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரும் அரேத்தாவை தங்களுள் ஒரு சகாவாகவே பார்த்தனர்.

பில் கிளிண்டன் மற்றும் ஜிம்மி கார்ட்டர் போன்ற அமெரிக்க ஜனாதிபதிகளின் பதவியேற்பு விழாவில் அரேத்தா பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு நாட்டின் உயர்ந்த விருதாக குடிமக்களுக்கு வழங்கப்படும் ஜனாதிபதி விருதை கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் வழங்கி கௌரவித்தார்.

கிட்டத்தட்ட 1960 களில் இருந்து 50 ஆண்டுகளுக்கும் மேல் இசைத்துறையில் காலத்தால் அழியா படைப்புக்கள் பலவற்றை அளித்த இவரது மறைவு அமெரிக்க மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்பட பலரும் அரேத்தா ஃப்ராங்ளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்!!(உலக செய்தி)
Next post வெட்டகமே இல்லாம மார்பகத்த குலுக்குறாங்கப்பா!!(வீடியோ)