ஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…!!(மருத்துவம்)

Read Time:2 Minute, 21 Second

‘குளியலே ஒரு சிகிச்சைதான் என்பதையும், குளிப்பதற்கென்று ஆயுர்வேத மருத்துவத்தில் சில முக்கியமான வழிமுறைகள் இருப்பது பற்றியும் தெரிந்து வைத்திருப்பீர்கள். இதில் ஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று இருக்கிறது’’ என்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான பிரபு.

அப்படி என்ன முக்கிய செய்தி?!

‘‘ பொதுவாக நம்முடைய உடல் சூடு பாதத்திலிருந்து மெல்லமெல்ல மேலே சென்று தலையில் உள்ள கண், காது, வாய், வாய், மூக்கு வழியாக வெளியேறுகிறது. அதனால்தான் குளிக்கும்போது முதலில் பாதத்தில் தண்ணீரை ஊற்றி, பின்பு மெல்லமெல்ல முழங்கால்கள், தொடைப்பகுதி, இடுப்பு, மார்பு, கழுத்து என்று தண்ணீரால் நனைத்து இறுதியாக உச்சந்தலையில் தண்ணீரை ஊற்றுகிறோம். குளக்கரை மற்றும் ஆற்றங்கரையில் படிக்கட்டுகளின் வழியாக மெல்ல மெல்ல உடலை நனைத்து குளிக்கும் முறையும் இதனை அடிப்படையாகக் கொண்டதுதான்.

ஷவர் பாத் மேற்கொள்கிறபோது இதிலிருந்து மாறுபட்டு நேரடியாக உச்சந்தலையில் தண்ணீர் இறங்குகிறது. இதன் மூலம் உடற்சூடு உடலினுள்ளே இறங்கிவிடுகிறது. இதனால் உடல் சூடு உடலிலேயே தங்கி மலச்சிக்கல், மனச்சிக்கல், மூலம், உயர் ரத்த அழுத்தம் தூக்கமின்மை, தலைவலி, ஒற்றைத் தலைவலி, அல்சர், ஜீரணமண்டலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனைத் தவிர்க்க ஷவரில் குளிப்பவர்கள் முதலில் பாதம் முதல் தலை வரை தண்ணீரை கொஞ்சம்கொஞ்சமாகப் படும்படி நனைத்துவிட்டு அதன்பிறகே தலையில் தண்ணீர் படும்படி குளிக்க வேண்டும்’’.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழிவிலிருந்து மீண்டுவந்த 5 அதிசய உயிரினங்கள்!! (வீடியோ)
Next post இந்த 7 விஷயத்த பசங்க, லவ் பண்ற பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பண்ணுவாங்க!(அவ்வப்போது கிளாமர்)