அகத்தின் அழகு ஸ்பாஞ்சில் தெரியும்! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 3 Second

மேக்கப் சரியாக போட்டுக்கொள்கிறோமா என எப்போதும் நாம் யோசிப்பதில்லை. நம்மை விடுங்கள். ஆயிரக்கணக்கில் பணம் வாங்கும் பார்லர்களில் முதலில் சரியாக மேக்கப் போடுகிறார்களா என நாம் ஆராய்வதில்லை. போலவே எத்தனை மேக்கப் ஆர்டிஸ்ட்கள் குறைந்தபட்சம் லிப்ஸ்டிக் மற்றும் க்ரீம்களுக்கு தனித் தனி ப்ரஷ்களை பயன்படுத்துகிறார்கள் என்றும் பார்ப்பதில்லை.

ஆனால், காஸ்மெட்டிக் உலகமோ இதற்கென ஸ்பாஞ்சுகள், ப்ரஷ்கள் என லட்சக்கணக்கில் மாடல்களை குவித்து வருகின்றன. ஆம். இவையும் அப்டேட் ஆகியிருக்கின்றன! அளவு மற்றும் பயன்படுத்தும் உயர்ரக பஞ்சுகளைப் பொறுத்து ரூ.100ல் தொடங்கி ரூ.3 / 4 ஆயிரங்கள் வரை மேக்கப் ஸ்பாஞ்சுகள் விற்பனையாகின்றன!

இவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

மேக்கப் ஆரம்பிப்பதற்கு முன்பே தண்ணீரில் நனைத்து நன்றாக இந்த ஸ்பாஞ்சுகளை பிழிந்து விடவேண்டும். பின் எந்த க்ரீமை பயன்படுத்தப் போகிறோமோ அதை கைகளின் பின்புறம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டு ஸ்பாஞ்சின் ஓரமாக அதை எடுத்து ஒத்தடம் கொடுப்பது போல் அப்ளை செய்ய வேண்டும். ஒரு க்ரீமில் பயன்படுத்திய ஸ்பாஞ்சுகளை இன்னொன்றில் பயன்படுத்தக் கூடாது.

அறுகோண வடிவ பஞ்சுகள்:

இவை பெரும்பாலும் சாதாரண பஞ்சுகளாக, மீண்டும் பயன்படுத்த முடியாத யூஸ் & த்ரோ வகையறாக்கள். இவற்றை கண்களின் அடியில் அல்லது மூக்கின் ஓரங்களில் அப்ளை செய்வது கடினம். அதனால் விலையும் சற்று குறைவே.

ப்ளாண்ட் பஞ்சுகள்:

இவை கருப்பு நிறத்தில் மூங்கில் சாம்பல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. முகத்தின் தோல் துவாரங்களில் உள்ள அழுக்குகளை நீக்கும் என்பதால் இதன் விலை சற்று அதிகம். கைகளில் பிடித்துக்கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

ஃப்ளாக் பஞ்சுகள்:

பவுடர் மேக்கப் பொருட்களை இந்த பஞ்சுகள் கொண்டு அப்ளை செய்வது எளிது. கலர்ஃபுல் காம்போக்களாக இவை கிடைக்கும். பவுடர்களை முழுமையாக, சீராக ஒத்தி எடுக்க இந்த பஞ்சுகள் அதிகம் பயன்படும். வீட்டில் சொந்தப் பயன்பாட்டுக்கு இவற்றைத்தான் பல மேக்கப் விரும்பிகள் பயன்படுத்துகிறார்கள்.

மைக்ரோ மினி பஞ்சுகள்:

ஃப்ளாக் பாணியிலேயே அதே சமயம் கொஞ்சம் பெரிய சைஸ் பாதாம் போல் இருக்கும். இவற்றைக் கொண்டு க்ரீம்களை மிக நுண்ணிய பகுதிகளில் சீராக நிரப்பலாம். இவை சில சமயம் ஃப்ளாக் பஞ்சுகளுடன் காம்போவாகவே கிடைக்கும்.

பியூட்டி ப்ளண்டர்:

மேக்கப் ஆர்டிஸ்ட்டுகளின் ஃபேவரைட் பஞ்சுகள் இவை. பிங்க் நிறத்திலேயே அதிகம் வரும். ஃபவுண்டேஷன் க்ரீம், ப்ளஷ், ஹைலைட், காண்டோர் என அத்தனை ஏரியாக்களிலும் விளையாடும் பஞ்சுகள் இவை. விலையும் கொஞ்சம் அதிகம். இவை மட்டுமின்றி ப்ரஷ் மற்றும் ப்ரஷ் வடிவ பஞ்சுகளை ஹைடெக் மேக்கப் ஆர்டிஸ்ட்டுகள் பயன்படுத்துகிறார்கள். ‘‘சில மேக்கப் ஆர்டிஸ்ட்கள் டேபிள் துடைக்கும் பஞ்சுகளையே மேக்கப்புக்கும் பயன்படுத்துகிறார்கள். இப்படிச் செய்தால் மேக்கப் முடிந்தபிறகு அவை கோடு கோடாகத்தான் தெரியும்.

போடும்போதே எரிச்சலையும் உணரலாம். காய்ந்த ஸ்பாஞ்சில் மேக்கப் போடவே கூடாது. ஈரமாக்கித்தான் பயன்படுத்த வேண்டும். ரூ.5 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கூட மேக்கப் போடுகிறார்கள். அப்படியிருக்கும்போது தனித்தனி ஸ்பாஞ்சுகளை உபயோகிப்பதே நல்லது. ஒருவருக்கு பயன்படுத்திய பஞ்சுகளை இன்னொருவருக்கு உபயோகிக்கும்போது முதல் நாள் 100 மி.லி. நீரில் மூன்று சொட்டு ஹைட்ரஜன் பெராக்சைட் விட்டு ஸ்பாஞ்சை அதில் ஊற வைத்து பயன்படுத்தலாம்.

பருக்கள் அதிகமுள்ள முகங்களில் உபயோகித்த ஸ்பாஞ்சு எனில் 100 மி.லி. நீரில் 50 சொட்டு டிட்ரீ ஆயில் விட்டு அதில் இந்த ஸ்பாஞ்சை ஊற வைத்து பிறகு இன்னொருவருக்கு பயன்படுத்தலாம். இல்லையெனில் பருக்கள் அல்லது அலர்ஜி என ஒருவருக்கு இருக்கும் பிரச்னை மற்றவருக்கும் தொற்றும். முடிந்தவரை மென்மையான, தரமான ஸ்பாஞ்சுகளை பயன்படுத்த வேண்டும். போலவே ஒவ்வொரு ப்ராடக்ட்டுக்கும் ஒவ்வொரு ஸ்பாஞ்சை உபயோகிப்பதே நல்லது…’’ என்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 6.4 ரிக்டர் அளவு கோளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !!(உலக செய்தி)
Next post தண்ணீரில் இடி விழும் அற்புதமான நேரடி வீடியோ!(வீடியோ)