படித்த ‘குற்றத்திற்காக’ 12 நாட்கள் கற்பழிக்கப்பட்ட பாக். பெண்!

Read Time:3 Minute, 40 Second

Woman.Sad.2.jpgமத குருமார்களின் உத்தரவை மீறி பட்டப்படிப்பை முடித்த ‘குற்றத்திற்காக’ பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண்ணையும், அவரது தாயாரையும் 12 நாட்கள் அடைத்து வைத்து மாறி மாறி கற்பழித்த கொடுமை அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் முல்தான் மாவட்டம் கபீர்வாலா என்ற நகருக்கு அருகே உள்ள சக் ஷெர் கான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது உசேன். முன்னாள் ராணுவ வீரரான இவரது மனைவி பெயர் மும்தாஜ் மய். இவர்களது மகள் கஜாலா ஷாஹீன் பதி.

இவர்கள் மிராலி என்ற பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த வகுப்பைச் சேர்ந்த பெண்கள் கல்வி அறிவு பெறக் கூடாது என பழங்குடியின மத குருமார்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆனால் இதை மீறி ரகசியமாக படித்து வந்தார் கஜாலா.

இந்த நிலையில் கடந்த 25ம் தேதி இவர் பஹாவுதீன் ஜஹாரியா பல்கலைக்கழகத்தில் எம்.எட். படிப்பை முடித்தார். இது ஊர் மத குருமார்களுக்குத் தெரிய வந்தது. தங்களது கட்டுப்பாட்டை மீறி கஜாலா பட்ட மேற்படிப்பை படித்ததால் அவர்கள் ஆத்திரமடைந்தனர்.

கிராம பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அதன் முடிவில் மும்தாஜ் மற்றும் கஜாலாவை 12 நாட்கள் தனி வீட்டில் அடைத்து வைத்து கற்பழிக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இருவரும் தனி வீட்டில் அடைக்கப்பட்டு கடந்த 12 நாட்களாக கும்பல் கும்பலாக கற்பழிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்த கஜாலாவின் தந்தையையும் அடித்து உதைத்துள்ளனர்.

12 நாள் கொடுமைக்குப் பின்னர் இரு பெண்களையும் ஒரு அமைச்சரின் ஆட்கள் கடத்திச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் கிராம மக்கள் பொங்கியெழுந்து அந்த காரை துரத்தி நிறுத்தினர். ஆனால் காரில் இருந்த 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். இரு பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பாகிஸ்தானில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு முத்தாரன் மய் என்ற பெண், சொத்துப் பிரச்சினை காரணமாக ஒரு கிராமத்தால் கூண்டோடு கற்பழிக்கப்பட்ட கொடுமை நடந்தது. பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தலையிட்டு அவரை மீட்டது.

தற்போது படித்த குற்றத்திற்காக மகளையும், தாயையும் 12 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்த மிகப் பெரிய கொடுமை நடந்துள்ளது. ஆனால் இந்த சம்பவத்தை பாகிஸ்தான் காவல்துறை மறுத்துள்ளது. இது கட்டுக் கதை என்று கபீர்வாலா போலீஸ் அதிகாரி கூறினார். ஆனால் இருவரும் பலரால் பலமுறை கற்பழிக்கப்பட்டதை உள்ளூர் மருத்துவனை உறுதிப்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
Next post ஈராக்கில் குண்டு வெடித்ததில் 23 பேர் பலி