தொடர் அரசியல் கொலைகள் – பொலிஸார் கூண்டோடு கைது !!(உலக செய்தி )

Read Time:2 Minute, 3 Second

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி, செனட்டர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின் அங்கு தொடர்ந்து அரசியல் கொலைகள் நடந்து வருகின்றன.

போதை மாபியா ஆதிக்கம் கொண்ட நாடான மெக்சிகோவில் இது போன்ற அரசியல் கொலைகள் வழக்கமானது என்றாலும், சமீபத்தில் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வாரத்தில் மட்டும் மூன்று முக்கிய அரசியல்வாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மிசோவ்கன் மாநிலத்தில் உள்ள ஒகாம்போ நகர மேயர் பதவிக்கு போட்டியிட்ட பெர்னாட்னோ ஜுவாரெஸ் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் சம்பந்தப்பட்ட கும்பலுக்கும் நகர பாதுகாப்பு செயலாளர் ஆஸ்கர் கார்சியாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனை அடுத்து, ஆஸ்காரை கைது செய்ய சிறப்பு படையினர் ஒகாம்போ நகருக்கு விரைந்தனர். ஆனால், ஒகாம்போ நகர பொலிஸார், சிறப்பு படையினரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து, நகர காவல் பணியில் உள்ள 27 பொலிஸார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 பொலிஸாருடன் ஆஸ்கர் கார்சியாவும் கைது செய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எனக்கு அழகில்லையா? இளமையில்லையா? நடிகை புலம்பல்!(சினிமா செய்தி)
Next post “இச் அது நச்சு” இனம் புரியாத ஈர்ப்பு “முத்தம்” !!(அவ்வப்போது கிளாமர்)