பதஞ்சலி முனிவர் முதல் பறக்கும் யோகா வரை!!(மருத்துவம்)
எந்த வயதிலும் யோகாசனம் செய்யலாம். இதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது.
* யோகாசனம், பிராணாயாமம் போன்றவற்றை மாதவிடாய் காலங்களிலும்பெண்கள் செய்யலாம். இதனால் உடலுக்கு சமநிலை கிடைப்பதுடன் ரத்த இழப்பு, இடுப்புவலி, முதுகுவலி, வயிற்றுவலி மற்றும் இதனால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்தும், மாதவிடாய்க்கு முன்பாக வரக்கூடிய Premenstrual Syndrome- பிரச்னையிலிருந்தும் விடுபட முடியும் என்று லண்டன் கிங்ஸ் கல்லூரி பேராசிரியை ஜெனிஃபர் ஓட்ஸ் கூறியிருக்கிறார்.
* மகரிஷி பதஞ்சலி என்கிற யோகி, இந்தக் கலையை மானுடர்க்கு ஏற்றவாறு மாற்றி அதன் சாரத்தையும், அதன் மூலம் அவர் பெற்ற ஞானத்தையும் தொகுத்து வழங்கியுள்ளார். இன்று அனைவரிடத்தும் அந்தப் பயிற்சியானது நோய் வரும்முன் காக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பரவலாக
கடைபிடிக்கப்படுகிறது.
* யோகாவானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த பூமியில் தன் ஆணிவேரை பதித்திருக்கிறது. வேதங்கள் உருவானபோதே யோகக்கலை புழக்கத்தில் இருந்ததன் மூலம் அது வேதங்களைவிட மிகவும் பழமையானது என்பது தெளிவாகிறது.
* யோகா பயிற்சிகள் ஒருவருடைய உடலையும், மனதையும் ஒருநிலைப்படுத்துவதோடு, உடல் வலிமை பெறுவதற்கும் யோகா பயிற்சிகள்
உதவுகிறது.
* காலமாற்றத்துக்கேற்ப யோகா புதுப்புது வடிவம் பெறுகிறது. அவற்றில் ஒன்றுதான் நாற்காலிகளை வைத்தே எளிதாக செய்ய முடிகிற Chair Yoga.
* ஊடகங்களின் வழியாக யோகாசனம் பற்றி அறிந்து கொள்ளலாம். முறைப்படி ஒரு குருவிடம் கற்றுக் கொள்ளும்போதுதான் நாம் எதிர்பார்க்கிற பலன்கள் முழுமையாகக் கிடைக்கும். அதிலும் நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஒரு குருவின் வழிகாட்டுதலின் படியே பயிற்சிகளில் இறங்க வேண்டும்.
* இளைஞர்களையும் யோகாவை நோக்கி ஈர்க்க வைக்கும் விதத்தில் Flying Bird Yoga என்ற பயிற்சியை பெங்களூருவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தமிழில் இதற்கு பறக்கும் யோகா என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்.
* இன்றைய அவசர வாழ்வில் யோகாசனத்துக்கு மணிக்கணக்காக நேரம் ஒதுக்க முடியாது. அதனால் மூச்சுப்பயிற்சி, தியானம், ஆசனம் என்று அரை மணிநேரத்துக்குள் இந்தப் பயிற்சிகளை தலா 10 நிமிடங்கள் செய்வதே போதுமானது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating