யோகா செய்ய விரும்புகிறவர்கள் கவனத்துக்கு…!!(மருத்துவம்)

Read Time:2 Minute, 25 Second

உடல் மற்றும் மனதினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் யோகா பயிற்சிகளை செய்வது நல்லது.

* அரசு கட்டுப்பாட்டிலுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு இலவசமாக யோகா பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் நோய்களுக்கு இயற்கை மருத்துவ முறைகள் மற்றும் யோகா பயிற்சிகள் மூலம் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

* யோகா பயிற்சி மேற்கொள்ளும் இடங்கள் நல்ல காற்றோட்டத்துடன், சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும்.

* பயிற்சிகளை செய்வதற்குமுன் காலைக் கடன்களை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்.

* Yoga Mat -ல் பயிற்சிகள் செய்ய வேண்டும். இல்லையென்றால் சுத்தமான விரிப்புகள், ஜமுக்காளம் போன்றவற்றை தரையில் விரித்து அதன்மேல் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

* தளர்வான மேலாடைகள் அணிவது இதுபோன்ற பயிற்சிகளை செய்வதற்கு சுலபமாக இருக்கும். மேலும் உள்ளாடைகள் சரியான அளவு இறுக்கத்துடன் இருப்பது அவசியம்.

* யோகா பயிற்சிகளை கண்டிப்பாக வேகமாக செய்யக்கூடாது. உடல்சோர்வாக இருக்கும்போது செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

* பயிற்சி முடித்தபிறகு அரைமணி நேரம் கழித்துதான் குளிக்க வேண்டும்.

* அதேபோல் பயிற்சி முடித்த அரைமணி நேரம் கழித்த பிறகே உணவு உண்பதும், குடிநீர் அருந்துவதும் சரியானது.

* யோகாவை சரியான முறையில் எப்படி செய்ய வேண்டும் என்று அதற்குரிய யோகா மருத்துவரிடம் அல்லது பயிற்சியாளரிடம் கற்றுக்கொண்ட பிறகு செய்வதால் அதனுடைய முழுமையான பலனை நாம் பெறலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமானுஷ்யம்! சித்தர்கள் போன்ற மிகச் சிறிய குள்ள மனிதர்கள்! அடர்ந்த காட்டில் பதிவான அதிர்ச்சி வீடியோ!
Next post மாகாணசபைத் தேர்தல்: புதிய அரசியல் தடத்தைப் பதியுமா?(கட்டுரை)