வாழ்க்கையை வசீகரமாக்கும் வெந்தயமும் ஒரு வயகராதான்!!(அவ்வப்போது கிளாமர்)
வெந்தயம், இந்திய உணவு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வெந்தயத்தை வைத்து ஏகப்பட்ட உணவுப் பயன்பாட்டை இந்திய மக்கள் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் இந்த வெந்தயத்திற்கு செக்ஸ் வாழ்க்கையை இனிமையாக்கவும் சுறுசுறுப்பாக வைக்கவும் உதவுகிறது. அதாவது வெந்தயம் ஒரு நேச்சுரல் வயகராவாம். இந்தியாவில் படு சாதாரணமாக உபயோகப்படுத்தப்படும் வெந்தயத்திற்கு ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை தூண்டும் சக்தி அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆண்களுக்கு உண்மையிலேயே சந்தோஷமான செய்திதான்.இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர் அதில் தொடர்ந்து வெந்தயத்தை சாப்பிட்டு வருபவர்களும் வெந்தயத்தை சாப்பிடாதவர்கள் என இரண்டு குழுக்களாக பிரித்தனர். இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 52 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வுக்குட்படுத்தினர். வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கிறதாம்.
அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயச் சாறு கொடுத்துப் ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வுக்குட்படுத்தபட்ட காலத்தில் வெந்தயம் சாப்பிட்டவர்களின் செக்ஸ் உணர்வுகள் கண்காணிக்கப்பட்டன. ஆறு வார காலத்திற்குப் பின்னர் அவர்களது செக்ஸ் உணர்வுகள் 16.1 என்பதிலிருந்து 20.6 சதவீதமாக அதிகரித்திருந்தது தெரியவந்தது.
அதேசமயம், வெந்தயம் சாப்பிடாமல் ஒரு குழுவினரை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தபோது அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் மந்தமாக இருந்தது தெரிய வந்தது. வெந்தயச் செடியின் விதைகளில் சபோனின் எனப்படும் ஒரு கூட்டுப் பொருள் உள்ளது. அது ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானை தூண்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும் ஒன்றாக வெந்தயம் செயல்படுகிறது..
படுக்கை அறையில் இனி முழுமையான உணர்வுகளுடனும், சந்தோஷத்துடனும் பொழுதினை கழிக்க இனி அடுக்களைப் பக்கமும் போங்கள் வாழ்கை வசீகரமாகும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating