தாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை!!(அவ்வப்போது கிளாமர்)

Read Time:5 Minute, 33 Second

“சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்று கூறினாலும், படுக்கையறையில் சில விசயங்களைத் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த வகையில், தாம்பத்திய உறவிர்க்குப்பின் தவிர்க்க வேண்டியவைகளாக பாலியல் நிபுணர்களால் கூறப்பட்டவை….

உடனே தூக்கத்தில் விழுவது:

தம்பதியர் பலருக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது. அதாவது செக்ஸ் உறவு முடிந்ததும் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே உடனே தூங்கிவிடுவது தவறு. இது தாம்பத்திய உறவின் வசீகரத்தை கொன்றுவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். உடனடியாக உறக்கத்தில் விழுவது,செக்ஸ் உறவு எவ்வாறு இருந்தது என சிந்திக்க விடாது .அந்த இனிமையான மனநிலையை ரசிக்கவும் முடியாது போய்விடும்.

குளியலறைக்கு ஓடுவது:

உறவிற்குப் பின் குளித்து உடலை தூய்மைப் படுத்திக்கொள்வது நல்லதுதான். அதுவும் இருவரும் ஒன்றாக எனில் கூடுதல் சுகமிருக்கும். ஆனால் உடனே குளியலறை நோக்கி ஓடத் தேவையில்லை என்கிறார்கள் செக்சாலஜிச்டுகள். வேலை முடிந்து விட்டது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் துணை இன்னும் அந்த மன நிலையில் இருக்கலாம், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று எதிர்பார்க்கலாம் என்று விளக்குகிறார்கள். உடனே குளியலறை நோக்கி ஓடினால், ஏதோ தவறு போல என்றும் துணையை எண்ண வைக்கக்கூடும் என்கிறார்கள்.

நண்பரை அழைத்துப் பேசுவது:

இதுவும் பொதுவாக தம்பதியர்கள் செய்யும் தவறுதான். அதாவது, நெருக்கமான தருணத்திட்குப் பின் தமது நண்பரை அல்லது தோழியை போனில் அழைத்துப் பேசுவது. அலுவலக விசயங்களை நாம் நள்ளிரவில் பேசுவதில்லையே? அதைப் போல நட்பு ரீதியான பேச்சையும் காலையில் வைத்துக்கொள்ளலாமே? படுக்கையறை மகிழ்ச்சி வேளையில் இது ஓர் இடைஞ்சலாகவே இருக்கும். உறவில் உங்களுக்கு உண்மையான நாட்டமில்லை என்றும் துணையை எண்ணச்செய்யும்.

வேலை அல்லது படிப்பில் ஆழ்வது:

செக்சின் போது தம்பதியர் மனதில் ஓடுவது என்ன என்பதற்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை. ஆனால்உறவிற்குப் பின் வேலை அல்லது படிப்பைக் கவனிக்கப் போகிறவர்கள் அதற்கான விடையைக் கூறி விடுகிறார்கள். தாம்பத்திய உறவு வேளையிலும் அவர்கள் மனதை வேலையோ, படிப்போதான் ஆக்கிரமித்திருக்கிறது. எப்படி படிப்பு அல்லது வேலையின் போது செக்ஸ் எண்ணங்களில் மனதை அலைபாய விடுவது தவறோ, அதைப் போல தம்பதியரின் அந்தரங்க வேளையிலும் படிப்பு, வேலை என்று சிந்தனை ஓடினால் தப்பு!

தனித்தனியே உறங்குவது:

தம்பதியர் தனித்தனியாக படுக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் மோக வித்தை புரிந்த அந்த இரவிலும் உடனே தலையணையையும்,போர்வையையும் தூக்கிக்கொண்டு தனியாக தூங்கச் செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல. இது, அன்றைய இரவின் அழகான சூழ்நிலையைக் கெடுப்பது மட்டுமல்லாது. தொடர்ந்து வரும் இரவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

குழந்தைகளை அழைத்துக்கொள்வது:

அந்தரங்கச் சூழலில்அடுத்தவரை ஊடுருவ விடுவது, அந்தச் சந்தோசத்தின் முழுமையைச் சிதைத்து விடும். அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. உறவு நேரத்திற்குப் பின் குழந்தைகளை அழைத்து உடன் படுக்க வைத்துக்கொள்ளுவது துடிப்பு, இயல்பாகவே பெண்களுக்கு அதிகம். இன்னும் “ரொமாண்டிக் மூடில்”இருந்து மாறாத கணவனுக்கு அது ஏமாற்றத்தைத் தரும்.

சாப்பிடுவது:

படுக்கையறைக்கு போக முன் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து நிதானமாக சாப்பிடுவது அற்புதங்களை நிகழ்த்தும். ஆனால் செக்ஸ்க்கு பின் சாப்பிடுவது, முன் நிகழ்விற்கு சமமான மோசமான விசயமாகும். உங்களுக்கு உடல் பசியில்லை… குடல் பசி தான், வயிற்றிற்குசோறிடுவது பற்றித்தான் உறவு நேரமெல்லாம் உங்களுக்கு சிந்தனை ஓடியிருக்கிறது என்று துணையை நொந்து கொள்ளச் செய்யும் உங்கள் செயல்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாளத்தில் சிக்கி தவித்த கைலாஷ் பக்தர்கள் மீட்பு!!
Next post அவசர வைத்தியம்!!(மருத்துவம்)