தனிமையில் வாழ்ந்தால் விரைவில் மரணம் – ஆய்வில் தகவல் !!( உலக செய்தி )

Read Time:1 Minute, 31 Second

தனிமையில் வாழ்பவர்களின் பாடு திண்டாட்டம் என்பது பொதுவான நியதி. ஆனால் அவர்கள் விரைவில் மரணம் அடைகிறார்கள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

டென்மார்க்கை சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சேர்ந்த பயிற்சி மாணவர் அன்னி விண்கார்ட் கிறிஸ்டன்கன் இத்தகைய ஆய்வை மேற்கொண்டார்.

13,463 இருதய நோயாளிகள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களிடம் உங்களுக்கு எப்படி இருதய நோய் ஏற்பட்டது. உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது ஏன். புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால் இருதயநோய் உண்டானதா? என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதில் அளித்த அவர்கள் தனிமை கொடுமையால் தான் இத்தகைய நோய் ஏற்பட்டது என்றனர். தனிமையால் இருமடங்கு மனஅழுத்தம் மற்றும் அச்ச உணர்வு ஏற்பட்டு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்படுகிறது.

இந்நிலை தொடரும் பட்சத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே மரணம் அடைகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பரவ வேண்டியது விழிப்புணர்வுதான்…பதற்றம் அல்ல!(மருத்துவம்)
Next post இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்… தெரியாததும்…!!(அவ்வப்போது கிளாமர்)