நச்சு கலந்த மாம்பழங்களை சாப்பிடுகிறீர்களா?(மகளிர் பக்கம்)
இயற்கை முறையில் விவசாயம் என்கிற நம்முடைய பாரம்பரியத்தை மறந்து செயற்கை உரம், செயற்கைப் பூச்சிக்கொல்லி மருந்து என்று செயற்கை ரசாயனங்களை, உணவுகளை உட்கொள்ளும் நிலைமையில் இருக்கிறோம் நாம். ஆனால் குறைந்த பட்சம் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் ரசாயனத்தில் நச்சு கலந்து இருக்கிறதா என்பதை நாம் கண்டறிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.”36 வயதினிலே” படத்தில் காட்டுவது போல் பழங்கள் பெரும்பாலானவை ரசாயனக் கலவையினால் பாதுகாக்கப்படுகின்றன, பழுக்க வைக்கப்படுகின்றன. அவற்றை கண்டறிந்து தவிர்த்தால் நம் உடல் நலத்திற்கு நல்லது. நச்சு கலந்த, ரசாயனங்கள் கலந்த மாம்பழங்களை கண்டறிவது எப்படி? அதற்கான சில டிப்ஸ்கள்…
மாங்காய்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பது, இந்தியா முழுவதிலும் சந்தை உற்பத்தியின் பற்றாக்குறை மற்றும் நுகர்வோரின் தேவை ஆகியவற்றை சுட்டிக்காட்டுகிறது. அதனால் இந்தியா முழுவதும் ரசாயன முறையில் பழுக்க வைப்பது அதிகரித்து வருகிறது. மாம்பழங்கள் எவ்வாறு ரசாயனம் மூலம் பழுக்க வைப்படுகின்றன? கால்சியம் கார்பைடு என்கிற ரசாயனம் இந்த செயல்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. “கால்சியம் கார்பைட்டின் பைகள் மாங்காய்களுடன் வைக்கப்படுகின்றன. இந்த ரசாயனம் ஈரப்பதத்துடன் தொடர்பு கொள்ளும்போது, அசிடைலீன் எனும் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விளைவுகள் எத்திலீன் போன்றவை, காய்களை பழமாக பழுக்க வைக்கும் செயல்முறைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவது உலகளவில் நடைமுறையில் உள்ளது. இயற்கை முறையில் பழுக்கும் மாம்பழங்கள் மிகுந்த ஊட்டச்சத்து உடையவையாக இருக்கும். மிகுந்த சதைப்பற்று உடையவையாக இருக்கும். இயற்கை முறையில் பழுக்கும் பழங்கள் உடலுக்கு மிகுந்த நன்மை செய்யக்கூடியவை. அதில் இருக்கும் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ ஆகியவை ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். சுகாதார பிரச்சனைகளை பரிசீலித்து செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கும் கால்சியம் கார்பைடை பயன்படுத்துவதை FSSAI தடை செய்துள்ளது.
கால்சியம் கார்பைடை பயன்படுத்தும் போது மனச்சோர்வு, தூக்கமின்மை, மனக்குழப்பம் மற்றும் ஞாபக மறதி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. நரம்புகளை பாதிக்கிறது. ஆர்செனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடுகளின் தடயங்கள் ஹார்மோன் செயல்பாட்டிற்கு கூடுதல் சேதம் ஏற்படுத்துகிறது. பழத்தின் தரம் கால்சியம் கார்பைடு பயன்பாடு மூலம் கணிசமாக குறையும்; பழத்தின் தோல் மென்மையாக இருக்கும். இல்லையெனில் இயற்கையான இனிப்பு இல்லாமலும் இனிப்பு குறைவாக இருக்கும். இயற்கை வேகத்தைக் காட்டிலும் பழம் வேகமாக பழுக்கும். கால்சியம் கார்பைடு எந்த அளவு என்பதை பொறுத்து, நச்சுத்தன்மையின் அளவு கணிசமாக அதிகரிக்கிறது.
வேதியியல் முறையில் பழுத்த மாம்பழங்களைக் கண்டறிய சில வழிகள்
1. மாம்பழத்தை வாங்கி தண்ணீரில் முக்கினால், மாம்பழங்கள் மூழ்கினால் அவை இயற்கையாகவே பழுத்திருக்கின்றன. பழங்கள் தண்ணீரில் மிதந்தால், அவை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டவை என்றும் தெரிந்து கொள்ளலாம்.
2.NABL சான்றளிக்கப்பட்ட ஆய்வுக்கூடத்தால் பரிசோதிக்கப்பட்ட பழங்களை பெறுவது சிறந்தது.
3. வண்ணத்தை சரிபார்க்கவும்.
செயற்கை முறையில் பழுத்த மாம்பழம், முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இயற்கையாக பழுத்த மாம்பழம் முழுக்க முழுக்க சீராக ஒரே நிறத்தில் இருக்காது.
4. ருசி.
செயற்கையாக பழுத்த மாம்பழங்களை உண்ணும்போது, வாயில் சிறிது எரிச்சல் உண்டாகும். புளிப்புச் சுவையுடன் இருக்கும். தோலும் அவ்வளவு ருசியாக இருக்காது. சிலருக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
இயற்கையாக பழுத்த மாம்பழத்தில் சாறு நிறைய இருக்கிறது; இருப்பினும், செயற்கை முறையில் பழுத்த மாம்பழம் குறைந்த அளவில் அல்லது சாறு இல்லாமல் இருக்கலாம். நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறி கடைக்கு அடுத்த முறை செல்லும் போது செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை அடையாளம் காண முடிந்தால், இந்த குறிப்புகள் எளிது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சந்தோஷமாக கோடையை கொண்டாடுங்கள்.
Average Rating