சீரற்ற காலநிலை – 12 பேர் உயிரிழப்பு, 124,733 பேர் பாதிப்பு !!

Read Time:1 Minute, 47 Second

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 31,822 குடும்பங்களை சேர்ந்த 124,733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

அதேநேரம் நாட்டின் 18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 11,723 குடும்பங்களை சேர்ந்த 44,745 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீரற்ற காலநிலையினால் 2199 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 35 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 751 ஏனைய சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களிலும் மழை அல்லது காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100-150 மில்லி மீற்றர் வரையிலான மழை வீச்சி பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லைஃப்ல ஏமாந்துட்டீங்களா…இந்த கட்டுரை உங்களுக்குத்தான்!(மருத்துவம்)
Next post பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!!!(அவ்வப்போது கிளாமர்)