மலேசியா தேர்தல் : 60 ஆண்டுகளுக்கு பிறகு மகாதிர் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி! !!

Read Time:2 Minute, 13 Second

மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற 14வது பொது தேர்தலில் மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பிரதமர் நஜீப் ரஸாக் ஆளும் பிஎன் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மாலை 5 மணியுடன் நிறைவடைந்த வாக்குப்பதிவில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

மலேசிய நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், எதிர்கட்சிகளின் கூட்டணி 115 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பிடித்தது. இதனால் 92 வயதான மகாதிர் முகமது மீண்டும் பிரதமராக தேர்வாகியுள்ளார். இதையடுத்து உலகில் மிகவும் வயதாக பிரதமர் என்ற பெருமையை மகாதிர் முகமது பெற்றுள்ளார். கடந்த 1957ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நஜீப் ரசாக் பிரதமராக இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் மீது அரசு பணத்தை சுரண்டியதாக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. மலேசியா வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 நாள் பயணமாக மியான்மர் வந்தடைந்தார் சுஷ்மா ஸ்வராஜ்!!
Next post தகவல் திருட்டு விவகாரம்: தலைமை பதவியில் உள்ளவர்களை வேறு பணிகளுக்கு மாற்றும் பேஸ்புக்!!