விஜய்யை நேரில் சந்தித்த தருணம் : கேரளத்து பெண் நெகிழ்ச்சி!! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 57 Second

சென்னையில் ரசிகர்களை நடிகர் விஜய் கடந்த 3 நாட்களாக சந்தித்தார். வரும் ஜூன் 22ம் தேதி விஜய்க்கு பிறந்தநாள். இதை முன்னிட்டு, சென்னை பனையூரில் இருக்கும் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், மாவட்டம் வாரியாக உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார் விஜய். கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர்கள் என 4, 5ம் தேதிகளில் ஆயிரம் பேருக்கு மேல் விஜய்யை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில் ஒரு நடிகருக்கு தீவிர ரசிகராக இருந்துகொண்டு அவரை நேரில் சந்திக்கும் தருணம் எப்படி இருக்கும் என்பதை கேரளா பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். அப்போது விஜய்யை நேரில் சந்தித்த தருணம் குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார் கேரள பெண். அதில் அவர், நான் உங்களை சந்திக்க பல நாட்கள் காத்திருந்தேன் என்று அவரிடம் கூறினேன், அதற்கு அவர், நமக்கான ரயில் வரும் வரை நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும் என்று சிரித்த முகத்துடன் தெரிவித்தார். புகைப்படம் எடுத்த பிறகு அவர் என் கையை பிடித்து ரொம்ப நன்றி என்று கூறியபோது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிச்சன் டிப்ஸ்..!!(மகளிர் பக்கம்)
Next post சட்டவிரோத சிகரட் தொகையுடன் ஒருவர் கைது!!