விவசாயம் செய்யும் ஜுஹி சாவ்லா!!(மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 32 Second

1984 ன் மிஸ் இந்தியா, பின்னாளில் பிர பல நடிகை, ரசிகர்களின் கனவுக்கன்னி என்ற பெருமைகளுக்கெல்லாம் உரியவர் நடிகை ஜுஹி சாவ்லா. இத்தகைய பெருமைகள் எல்லாம் இருந்த போதும் தற்போது சூழலியல் ஆர்வலர் என்ற பட்டமும் அவருக்கு மேலும் பெருமைச் சேர்த்திருக்கிறது. பெண்கள் முன்னேற்றத் திட்டத்தின் பிராண்ட் அம்பாஸிடராக ஜுஹி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்தியாவின் ஆர்கானிக் திருவிழாவின் அடையாளம் இவர் தான். இவருக்கு மும்பையின் புறநகரில் இரண்டு விவசாயப்பண்ணைகள் உள்ளன.

‘மும்பை மிரருக்கு’ அளித்த பேட்டியில் அது குறித்துக் கூறுகையில், “இந்தியாவில் முதன்முதலாக ஆர்கானிக் திருவிழா விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. இதில் என் கடமை என்னவென்றால் என்னுடைய செல்வாக்கினை பயன்படுத்தி லடாக்கிலிருந்து கன்னியாகுமரிவரை, கோஹிமாவிலிருந்து கட்ச் வரை உள்ள ஆர்கானிக் பண்ணைகள் வைத்து நடத்த விருப்பம் கொண்டிருக்கும் எனது நட்புகளை எனது அன்பான ரசிகர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பது. 70 மற்றும் 80களில் இருந்த சிறிய சந்தைகள் குறித்த ஞாபகங்களை மறுபடி மக்களிடம் ஏற்படுத்தி விவசாயத்தில் ஆர்வம் ஏற்படுத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

20 வருடங்களுக்கு முன் எனது தந்தை வேலையில் இருந்து ரிட்டயர் ஆகப் போகும் நேரத்தில் வடாவில் வைதர்ணா ஆற்றங்கரையோரம் கொஞ்சம் நிலம் வாங்கினார். அந்தப் பண்ணை பராமரிப்புக்காக அப்பா அங்கே அடிக்கடி செல்வார். நான் என்னுடைய ஷூட்டிங் பிஸியினால் அங்கே எப்போதாவதுதான் செல்வேன். ஆனால் 10 வருடங்களுக்கு முன்பு அப்பா இறந்த பிறகு அந்த நிலத்தைப் பார்த்துக் கொள்ளவேண்டியது என் பொறுப்பாகிவிட்டது. அப்பா நிறைய மரங்கள் நட்டு வைத்திருந்தார். அவருக்குப் பிறகு சரியான பராமரிப்பு இல்லாமல் அவை அழிந்துவிட்டன. பின்னர் நான் முறையாக பராமரிக்க ஆரம்பித்த பிறகு இப்போது 200க்கும் மேற்பட்ட மாமரங்கள், பப்பாளி, வாழை மரங்கள் இருக்கின்றன. மாதுளை, பேரிக்காய் மற்றும் சில காய்கறி பழங்கள் மற்றும் நெல்லும் பயிரிட ஆரம்பித்தோம். நகரத்தை விட்டு விலகி இப்படி ஓர் இடத்தில் இருக்கும்போது மனதுக்கு ரம்மியமாக இருக்கிறது.”

இந்தப் பண்ணையின் வளர்ச்சி அளித்த உற்சாகத்தால் ஜுஹி மறுபடி மந்துவா ஜெட்டி மலையடிவாரத்தில் இருந்து 15 நிமிடங்களில் பயணிக்கக்கூடிய தூரத்தில் உள்ள ஒரு நிலத்தை வாங்கினார். அது குறித்து ஜுஹி பேசுகையில், “எட்டு வருடங்களுக்கு முன் நான் வாங்கிய நிலத்தில் இரண்டு கிணறுகள் மற்றும் நிறைய மாமரங்களும், பப்பாளி மரங்களும் உள்ளன. நெல்லும் பயிரிடுகிறோம். அங்கேயே காய்கறிகளும் பயிரிட்டு எங்களது உணவகத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என என் கணவர் ஜே மேஹ்தா ஐடியா தெரிவித்தார். அவர் தற்போது ஆர்கானிக் தோட்டக்கலை நிபுணர் குழுவில் உள்ளார். அதனால் நாங்கள் சிறந்த முறையில் காய் மற்றும் கனிகளை பயிரிடும் முறையை நன்கு அறிந்துள்ளோம்” என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்! (பட்டியல் இணைப்பு) !!(சினிமா செய்தி)
Next post தவறான Magic Trick-ஆல் மேடையிலேயே உயிரை விட்ட சில(வீடியோ)