புஷ் மீது ஷூவை வீசிய ஊடகவியலாளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி!! (உலக செய்தி )

Read Time:1 Minute, 56 Second

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ் தனது கடைசி பயணமாக ஈராக் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

பாக்தாத் நகரில் ஈராக் ஜனாதிபதியுடன் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்து புஷ் உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது, ஈராக்கிய ஊடகவியலாளர் மண்டேசர் அல்-ஸைதி திடீரென எழுந்து தனது ஷூக்களை கழற்றி புஷ்-ஐ குறிவைத்து வீசினார்.

புஷ் கீழே குனிந்து தாக்குதலில் இருந்து தப்பிவிட்டார். இந்த சம்பவம் அப்போது உலகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஈராக்கில் நடக்கும் எல்லா சீரழிவுக்கும் புஷ் தான் காரணம் என்பதால் ஷூவை வீசினேன் என அல்-ஸைதி தெரிவித்திருந்தார். எனினும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நன்னடத்தை காரணமாக 9 மாதங்களில் அல்-ஸைதி விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர், அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது. இந்நிலையில், வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஈராக் பாராளுமன்ற தேர்தலில் அல்-ஸைதி போட்டியிட உள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சாத்ர் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்கியுள்ள அல்-ஸைதி, “திருட்டு அரசியல்வாதிகளை சிறையில் தள்ளுவது தான் எனது இலக்கு. அப்போது தான் நாடு வளம் பெறும்” என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலரை கரம்பிடித்தார் நடிகை… (படங்கள்) (சினிமா செய்தி)
Next post 4 வது மாதம்!!(மருத்துவம்)