5 பொலிஸார் சுட்டுக்கொலை!! (உலக செய்தி )

Read Time:1 Minute, 37 Second

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய தலீபான் பயங்கரவாதிகள்,பொலிஸார், இராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் கந்தகார் மாகாணத்தில் பாகிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மரோப் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பொலிஸார் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பொலிஸாரின் வாகனங்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பொலிஸார் உடனடியாக பதில் தாக்குதலை தொடுத்தனர்.

இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் சுட்டதில் பொலிஸ் அதிகாரிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 9 பொலிஸார் படுகாயம் அடைந்தனர்.

அதே சமயம் பயங்கரவாதிகள் தரப்பில் 15 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….!!(அவ்வப்போது கிளாமர்)
Next post மனைவிக்காக தோனி செய்த செயல்! நேத்து இத கவனிச்சீங்களா? (வீடியோ)