நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை !!(மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வெற்றிலையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். வெற்றிலை வயிற்றில் உள்ள வாயுவை அகற்ற கூடியது. செரிமானத்தை சீர் செய்யும் தன்மை கொண்டது. மூளை, இதயம், குடல், சிறுநீர் பை ஆகியவற்றை தூண்டும் தன்மை உடையது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வெற்றிலை சாற்றை பூசுவதால் புண்கள் விரைவில் ஆறும். அடிப்பட்ட காயங்கள் சரியாகும். வெற்றிலை மனம், சுவை, காரத்தன்மை கொண்டது.
வெற்றிலையை பயன்படுத்தி பசியை தூண்டும் ரசம் தயாரிக்கலாம். செய்முறை: 3 வெற்றிலைகளை எடுத்து காம்புகளை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் 2 பல் பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சிறிது பெருங்காயப் பொடி, கடுகு, காய்ந்த மிளகாய் போடவும். இதனுடன் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் வெற்றிலை கலைவையை சேர்க்கவும். இதனுடன் புளிகரைசல் சேர்த்து நீர்விடவும். பின்னர் தக்காளி துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைக்கவும். அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது. இந்த ரசத்தை உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர நெஞ்சக கோளாறுகள் விலகிப்போகும். சளி வெளியேறும். செரிமானத்தை சீர்செய்ய கூடியதாகிறது. சிறுநீர்தாரையில் எரிச்சல் இல்லாமல் போகும். இதயத்துக்கு இதம் தரக்கூடியது. ரத்தத்தை அழுத்தத்தை சமன்படுத்தும்.
வெற்றிலையை பயன்படுத்தி இருமல், சளியை போக்கும் தேனீர் தயாரிக்கலாம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் 2 வெற்றிலைகளை துண்டுகளாக்கி போடவும். இதனுடன் ஏலக்காய், லவங்கம், உலர்ந்த திராட்சை கலவையை நசுக்கி சேர்க்கவும். பின்னர், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடித்து குடித்துவர உடல் பலம் பெறுகிறது. நெஞ்சக சளியை கரைக்கும். இதய ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். குடலில் உள்ள புண்களை ஆற்றும். குடலை தூய்மைப்படுத்தும். பசியை தூண்டும். சிறுநீர் தாரையில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்யும். இந்த தேனீர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாதுகாப்பானதாகிறது.
குழந்தைகளுக்கு நெஞ்சக சளியை கரைக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் 2 சிட்டிகை கற்பூர தூள் போடவும். வெற்றிலைகளை ஒன்றன் மீது ஒன்றாவை வைத்து வாட்டி ஆறவைக்கவும். இளஞ்சூடாக இருக்கும்போது மார்பு, முதுகில் வைக்கும் நெஞ்சக சளி கரையும். தலைக்கு பற்றாக போடும்போது தலைவலி சரியாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட வெற்றிலை வாயுவை அகற்றுகிறது. உணவு செரிமானம் ஆவதற்கு உதவுகிறது. இதய ஓட்டத்தை சீர் செய்கிறது.
சிறுநீரகத்துக்கு பலம் கொடுக்கிறது. ஈரலுக்கு இதம் தருகிறது. சளி, இருமலை போக்கி நுரையீரலுக்கு பலம் தருக்கிறது. வாய்க்கு மணம், பற்களுக்கு பலம் கொடுக்க கூடியதாக விளங்குகிறது. வெற்றிலையை பயன்படுத்துவதன் மூலம் நாம் நலம் பெறலாம். யானைக்கால், விரை வீக்கத்துகான மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைகளுக்கு வல்லாரை மருந்தாகிறது. வல்லாரை கீரையை நன்றாக அறைத்து பூசும்போது வீக்கம் கரையும்.
Average Rating