திடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன? எப்படி தவிர்ப்பது?(மருத்துவம்)

Read Time:5 Minute, 51 Second


உலகின் அனைத்து உயிரினங்களும் ஏதாவது ஒரு கட்டத்தில் எதிர்கொள்ளும் கட்டாய நிகழ்வு. வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தாலும், இளம் வயதில் எதிர்பாராமல் ஏற்படும் உயிரிழப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இப்படி திடீர் மரணங்கள் அதிகமாகிக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? எப்படி தப்பிப்பது என்று இதய அறுவை சிகிச்சை நிபுணர் அனந்தராமனிடம் கேட்டோம்…

‘‘திடீர் மரணங்கள் பெரும்பாலும் இதயக் கோளாறு சார்ந்த பின்னணி கொண்டதாகவே இருக்கும். சமீபகாலத்தில் இந்த திடீர் மரணங்கள் அதிகரித்திருப்பதற்கு காரணம் தவறான வாழ்க்கை முறையும், மோசமான உணவுப்பழக்கங்களும்தான்.

35 வயதில் இருந்து 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் திடீரென மாரடைப்பால் இறப்பதை சமீபகாலமாக அதிகம் கேள்விப்படுவதற்கு இந்த வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கமே முக்கியமான காரணம். 15, 16 வயதுக்கு உட்பட்டவர்களும் இப்போது மரணமடைவது மிகப் பெரிய வேதனை.

இந்த திடீர் மரணங்களுக்கு Sudden Arrythmic Death (SAD) அல்லது Hypertrophic Cardiomyopathy என குறிப்பிடப்படுகிற HCM முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இதயத்தின் தசை சுவர்கள் தடித்து காணப்படும். இதனால், ரத்தம்
வெளியேறுவது தடைபடும். இதயத்தின் தசை அமைப்புகள் மாறும். எனவே, இதயத் துடிப்பு சீராக இருக்காது.

HCM எனக் குறிப்பிடுகிற ஹைப்பர்ட்ரோபிக் கார்டியோமயோபதி மரபணுக்களில் ஏற்படுகிற மாற்றம் காரணமாக ஒருவருக்கு வருகிறது. HCM பாதிப்பு கொண்ட ஒருவரிடம் இருந்து, அவரது குழந்தைக்கு இந்நோய் வருவதற்கு 50 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன. மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, படபடப்பு, தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளால் அறிந்துகொள்ள முடியும்.

ஒரு சிலர் இந்த அறிகுறிகளைத் தரமான சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்துவதைவிட, மென்மேலும் பெரிதாக விட்டுவிடுகிறார்கள். முன்னரே, கூறியது போன்று HCM என்ற இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இதய தசை சுவர் தடிமனான தோற்றத்தில் இருக்கும்.

எனவே, இதயத்தில் இருந்து, உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்தம் அனுப்பப்படுவது தடைபடும். HCM-யால் பாதிக்கப்பட்டவருக்கு இதயத்துடிப்பு தடைபடுதல், இதயம் சுருங்குதல் ஆகிய பிரச்னைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன’’ என்றவரிடம், ஹைப்பர்ட்ரோபிக் கார்டியோமயோபதி ஏற்பட என்ன காரணம் என்று கேட்டோம்…

‘‘இசிஜி, எக்கோ கார்டியோகிராம் மற்றும் உடற்பயிற்சி போன்ற பரிசோதனைகளைச் செய்வதன்மூலம் இதனை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். எலக்ட்ரோ கார்டியோகிராம்(ECG) நம்முடைய இதயத்தின் மின் நடவடிக்கைளைப் பதிவு செய்கிறது. இந்தப் பரிசோதனைகளில் மரபணு சோதனையும் முக்கிய இடம் பெறும்.

மக்களிடத்தில் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. 400 குடும்பங்களில் ஒரு குடும்பத்தினருக்கு HCM பாதிப்பு வரும். HCM-ல் பாதிக்கப்பட்டவருக்கு ரத்தப் பரிசோதனை செய்து பார்க்கும்போது, என்ன வகையான மரபணு மாற்றம் உள்ளது எனத் தெரிய வரும். அவர் ஒரு வருடத்துக்கு மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களில் யாராவது எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால், மற்றவர்களுக்கு HCM உள்ளதா என பரிசோதிப்பது அவசியம்.

மேலும், இந்நோயைக் குணப்படுத்துவதற்கென்று Genetic Therapy ஆராய்ச்சியில் உள்ளது. ஹைபர் டிராபிக் கார்டியோமயோபதியால் பாதிக்கப்பட்டவருக்கும், அவரது குடும்பத் தினருக்கும் Genetic counselling, Family counselling கொடுப்பதும் அவசியம்.ஒருவருக்கு HCM காரணமாக வரக்கூடிய இதயத்துடிப்பு சீராக இல்லாத போது ஷாக் டிரீட்ெமண்ட் தருவதுதான் ஒரேசிகிச்சை முறை (AICD). கடைசியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்.

அதேநேரத்தில் இந்த நோயின் அறிகுறிகளான மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும், அதனால் ஏற்படுகிற உடல் நலக் குறைபாடுகளைத் தடுக்கவும் எளிய சிகிச்சைமுறைகள் உள்ளன. இவை இதய பாதிப்பு மற்றும் HCM நோயின் அறிகுறிகள் ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்படும்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும்! ஏன் தெரியுமா..?(அவ்வப்போது கிளாமர்)
Next post கெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க!!(வீடியோ)