மகன், மகளை கழுத்தறுத்துக் கொன்று தந்தையும் தற்கொலை!!(உலக செய்தி)

Read Time:3 Minute, 1 Second

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சல்வார்பட்டி இந்த கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய அந்தோணி, விறகு வெட்டும் தொழிலாளி.

இவரது மனைவி முனீஸ்வரி (32), மகள் முத்துலட்சுமி (9), மகன் ஈஸ்வரன் (4). நேற்று (21) இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டினுல் இருந்தனர்.

இன்று (22) காலை அவர்கள் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது குழந்தைகள் முத்துலட்சுமி, ஈஸ்வரன் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.

முனீஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். ஆனால் அந்தோணி மட்டும் மாயமாகி இருந்தார். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முனீஸ்வரி சிகிச்சைக்காக சாத்தூர் அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மதுரை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் வெம்பக்கோட்டை பொலிஸார் விரைந்து சென்று உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். அந்தோணிதான் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கழுத்தை அறுத்து இருக்கலாம் என்று சந்தேகித்து அவரை பொலிஸார் தேடி வந்தனர்.

கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சிறுவன் – சிறுமியின் உடல்களை பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

இந்த நிலையில் சேது ராமலிங்காபுரம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலை அருகே கறுத்து அறுக்கப்பட்ட நிலையில் அந்தோணி பிணமாக கிடந்தார். அவர் பொலிஸாருக்கு பயந்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்தோணி மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் இதற்காக சிகிச்சை பெற்றதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே அவர் மனநலம் பாதிப்புக்கு உள்ளாகி மனைவி மற்றும் குழந்தைகளை கழுத்தை அறுத்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குற்றங்களின் சாட்சி கடவுள்!!(மகளிர் பக்கம்)
Next post வீரியம் அதிகரிக்க கட்டிலுக்கு போகும்முன் தொப்புளில் இந்த எண்ணெயை தடவிட்டு போங்க..!!(அவ்வப்போது கிளாமர்)