உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட கடன் மதிப்பு அதிகரிப்பு : பொருளாதார மந்தநிலை ஏற்படும் என எச்சரிக்கை!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 35 Second

உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட கடன் மதிப்பு 226 விழுக்காடாக அதிகரித்துள்ளதால் மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலை ஏற்படும் என பன்னாட்டு பணநிதியம் எச்சரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் உலகின் ஒட்டுமொத்த கடன் மதிப்பு 1கோடியே 64 லட்சம் கோடி டாலராக உள்ளது. இது இந்திய மதிப்பில் 106 கோடியே 60 லட்சம் கோடி ரூபாய் ஆகும். உலகின் ஒட்டு மொத்த மதிப்பை விட 225 விழுக்காடு அளவுக்கு கடன் உள்ளது.

ஜப்பானில் உள்நாட்டு உற்பத்தியை விட 236 விழுக்காடு கடன் உள்ளது. இத்தாலியில் 132 விழுக்காடும், அமெரிக்காவில் 108 விழுக்காடும் கடன் உள்ளது. வளரும் நாடுகளான பிரேசிலில் 84 விழுக்காடும் இந்தியாவில் 70 விழுக்காடும் கடன் உள்ளது. இதனால் மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என்றும் அதை எதிர்கொள்ள நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் பன்னாட்டு பண நிதியம் எச்சரித்துள்ளது. இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு உலக அளவில் ஒரு பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனம் – ஒரு பார்வை!!(மருத்துவம்)
Next post சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தால் மரண தண்டனை – அவசர சட்டம் அமுல்!!